முன்னெச்சரிக்கை எடுக்காத மின்வாரியம்.. சென்னையில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய மழை.. நிரம்பி வழிகிறது பக்கிங்காம் கால்வாய்!- வீடியோ

  சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டது.

  மழை காரணமாக சென்னையில் பல்வேறு டிரான்ஸ்பார்மர்களும் ஆபத்தான நிலையில்தான் உள்ளன. கீழ்ப்பாக்கம் குடிநீர்நிலையம் அருகேயுள்ள மின்மாற்றியும் இதேபோன்ற நிலையில்தான் இருந்தது. மின்மாற்றியிலிருந்து தீப்பொறி கிளம்பியபடிதான் இருந்துள்ளது.

  Electric transformers explode in Chennai

  இந்த நிலையில் இன்று காலை திடீரென அந்த மின்மாற்றி வெடித்து சிதறியது. இதனால் டிரான்ஸ்பார்மர் அருகே நின்றிருந்த 4 வாகனங்களுக்கும் தீ பரவியது. அந்த வாகனங்கள் தீயில் கருகின.

  இதனிடையே, டிரான்ஸ்பார்மர் அருகேயுள்ள அரசின் திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் உடனடியாக வராத நிலையில், பொதுமக்களே தண்ணீர் ஊற்றி தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தின் அருகே அம்மா உணவகம் உள்ளது. எனவே அங்கும் தீ பரவி விடுவதற்குள் அணைத்துவிட வேண்டும் என்று மக்கள் முயற்சி செய்தனர்.

  அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின்வாரிய அதிகாரிகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற விபத்துகளை தடுக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Electric transformers explode near water Nilayam at Kilpauk in Chennai.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற