திண்ணையில் தூங்கியவரை தூக்கி வீசிய யானை.. காயமடைந்தவருக்கு சிகிச்சை -ஈரோட்டில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அந்தியூர் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கம். அதனால் மக்கள் பீதியில் அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியில் பெசில்பாளையம் காரையூர் பகுதியை சேர்ந்தவர் ஈரண்ண கவுடர் மகன் மாதன். 55 வயதான இவர் வீட்டின் முன் உள்ள திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

Elephant throws a man in Erode

அப்போது அந்த வழியாக யானை ஒன்று வந்துள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மாதனுக்கு இது தெரியாது. நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த யானை அவரை அலேக்காக தூக்கி தூர வீசியது. இதில் அவருக்கு இடது கை, கால், மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

படுகாயம் அடைந்த மாதன் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தூங்கிக் கொண்டிருந்த மாதனை யானை தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An Elephant threw a man, who slept outside of residence in Erode. He admitted in government hospital.
Please Wait while comments are loading...