பெண்கள் கல்வி.. பாலர் பஞ்சாயத்து.. முன்னேற்றப் பாதையில் மேலும் ஓரடி முன்னே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கேர் தொண்டு நிறுவனம், பிரீடம் பண்ட் மற்றும் ஜெனிவா குளோபல் நிதி ஆதாரத்தோடு கிராமங்களில் பல்வேறு வளரிளம் பருவத்தினருக்கான மேம்பாட்டு பணிகளை செயல்படுத்தி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஈரோடு கேர் தொண்டு நிறுவனம்.

தற்காலிகமாக 30 கிராமங்களை தேர்ந்தெடுத்து வளரிளம் பருவத்திற்கான மேம்பாட்டு திட்டங்களை ஈரோடு கேர் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

பெண்களுக்கான வாழ்க்கை கல்வி

பெண்களுக்கான வாழ்க்கை கல்வி

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பெண்களுக்கு வாழ்க்கை கல்வி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வளரிடம் பருவத்தினருக்கான ஒருங்கிணைப்பு

வளரிடம் பருவத்தினருக்கான ஒருங்கிணைப்பு

மேலும், வளரிளம் பருவத்தினரை ஒருங்கிணைத்து அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அங்கு பயிற்சி வழங்கப்படும் அனைவருக்கும் உணவுகள் வழங்கி பசியாற்றும் பணிகளையும் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு

இதுதவிர இந்த கிராமங்களில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவரை கண்டறியும் பணிகளையும் இந்நிறுவனம் செய்து வருகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் கண்டறியப்படும் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

பள்ளி இடைநிற்கும் குழந்தைகள்

பள்ளி இடைநிற்கும் குழந்தைகள்

பள்ளிக்கு செல்ல முடியாமல் இடை நிற்கும் குழந்தைகளை இனம் கண்டு அவர்களை பள்ளியில் சேர்க்கும் தொண்டினையும் ஈரோடு கேர் செய்து வருகிறது. இவர்களுக்கு பகுதிநேர வகுப்புகள் மூலம் பள்ளி செல்வதற்கான அவசியத்தை வலியுறுத்தி ஊக்கப்படுத்தப்படுகிறது.

பாலர் பஞ்சாயத்து

பாலர் பஞ்சாயத்து

மேலும், சமுதாய தன்னிறைவு செயல்திட்டமாக சமுதாய ஆதரவு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுவர்களுக்கான பாலர் பஞ்சாயத்தும் இந்த தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Erode care NGO works for women and children in 30 villages.
Please Wait while comments are loading...