For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவிலும் மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்... ஐரோப்பிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் வலியுறுத்தல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிராக கருணாநிதி குரல் கொடுத்ததால் அவரிடம் ஆதரவு கேட்டு வந்தோம் என்று ஐரோப்பிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் தூதர் தலைமையில் 10 நாடுகளின் பிரதிநிதிகள் திமுக தலைவர் கருணாநிதியை சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர் பிரச்னையில் பன்னாட்டு நீதி விசாரணை குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

Europeon team upset over the refusal of CM to give appointment

மேலும், ஐரோப்பிய நாடுகளில் மரண‌ தண்டனை ஒழிக்கப்பட்டிருப்பதைப் போல இந்தியாவிலும், அந்த தண்டனைக்கு தடை விதிக்க இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிராக கருணாநிதி குரல் கொடுத்ததால் அவரிடம் ஆதரவு கேட்டு வந்தோம் என்று கூறினர்.

மேலும், தமிழகத்தில் தொழில்வளர்ச்சி, மத்திய-மாநில அரசிற்கும் இடையே உள்ள உறவு குறித்தும், இலங்கை-இந்தியா உடனான உறவு குறித்தும் கருணாநிதியிடம் கேட்டறிந்தோம். அடுத்தாக தமிழக முதல்வர், ஆளுநரை சந்திக்க உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வைகோ உடன் சந்திப்பு

இதனிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர் குழுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் வெளிப்படையான பன்னாட்டு நீதி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த குழுவிடம் வைகோ வலியுறுத்தினார்.

Europeon team meet DMK chief Karunanidhi

தமிழக அரசியல் நிலை குறித்தும், இலங்கையில் தமிழீழ மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 11ஆம் தேதி வரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தியாவுடனான ஐரோப்பிய நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்காக, இந்த குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவுடனான ஐரோப்பிய நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்காக, ஓவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த குழுவினர் சுற்றுப்பயணம் ந‌டத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An European team which visited former CM Karunanidhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X