மதுரை ஆயிரங்கால் மண்டபத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை... வல்லுநர்கள் குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிகழ்ந்த தீவிபத்தில் ஆயிரங்கால் மண்டபத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வல்லுநர்கள் குழு தெரிவித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் பற்றி எரிந்த தீ, மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது. இதையடுத்து 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Experts review in Madurai Meenakshi Amman temple

இந்நிலையில் அங்குள்ள வீரவசந்த மண்டபத்தில் இருந்த புறாக்கள் கருகின. அத்துடன் அந்த மண்டபமும் சேதமாகியது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயிரங்கால் மண்டபம் சேதமடையவில்லை என்று அன்றைய தினமே மாவட்ட நிர்வாகம் சார்பில் சொல்லப்பட்டது. இதனிடையே துணை முதல்வர், துறை அமைச்சர்கள் என ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வல்லுநர்கள் குழு ஆய்வு செய்தது. அப்போது அந்த குழுவினர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர். அவர்கள் கூறுகையில், வீரவசந்தராயர் மண்டபம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

மேலும் இடிபாடுகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வசந்த மண்டபத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கப்படும் என நிபுணர் குழு தெரிவித்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Experts review in Madurai Meenakshi Amman temple. They says that Ayirangal Mandapam is quite good. Veera Vasantha Mandapam only damages. Rejuvenation work will be done for this.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற