விஜய் பிறந்தநாள்... 4000 அடி நீளத்திற்கு போஸ்டர் ஒட்டி அசத்திய நெல்லை ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நடிகர் விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் நலத்திட்ட பணிகள், அன்னதானங்கள் கொடுத்து பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி அசத்தி வரும் ரசிகர்கள் நெல்லையில் உள்ள பாலத்தில் 4ஆயிரம் அடி நீளத்திற்கு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் ஆண்டுதோறும் திருவிழா போல கொண்டாடி வருகின்றர். இந்த ஆண்டு தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வா தலைவா என்று அழைத்துள்ளனர்.

திருநெல்வேலியில் விஜய் ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 4 ஆயிரம் அடிக்கு போஸ்டர் அடித்து அசத்தியுள்ளனர். அதில் தங்களின் ஆசையை குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே வேறு எந்த நடிகருக்கும் இப்படி ஒரு போஸ்டர் அடித்தது இல்லை. விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை இந்த பிறந்தநாளில் வெளிப்படுத்துவாரா பார்க்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tirunelvely fans posts 4000 ft poster for Vijay's Birthday.
Please Wait while comments are loading...