விவசாயிகளுக்கு ஹிட் நியூஸ்.. ரூ.3000 கோடி வட்டியில்லா கடன்! யாருக்கு கிடைக்கும்? தர்மபுரி ஈரோடு குஷி

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி, ஈரோடு உட்பட தமிழகத்தில் கால்நடை வளர்ப்போருக்கு மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. ஆம், மாடு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு என விவசாயத்தோடு சேர்த்து வருமானம் பார்க்கும் தொழில்களுக்கு இப்போது ஒரு பெரிய சான்ஸ் வந்துள்ளது. அதுவும் வட்டி இல்லாமல் கடன் கிடைக்கப் போகிறது., எந்த மாவட்டத்துக்கு எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் விவசாயம் மட்டுமே செய்து வருமானம் ஈட்டுவது பல நேரங்களில் சவாலாகவே இருக்கிறது. அதனால், விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களையும் விவசாயிகள் செய்து வருகிறார்கள்.. இது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மிகப்பெரிய அளவில் உதவிக்கொண்டிருக்கிறது..

Farmers Loan Livestock Loan Interest-Free Loan

இந்த தொழில்களுக்கு தேவையான முதலீட்டை சமாளிக்க கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கடன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருந்து, கால்நடை, மீன், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பிற வேளாண்மை தொடர்புடைய தொழில்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு 3000 கோடி கடன்

இந்தப் பிரிவில், நடப்பு நிதியாண்டில் மொத்தம் ரூ.3,000 கோடி கடன் வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, விவசாயத்துடன் இணைந்த தொழில்களை தொடங்கவோ, ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்தவோ நினைக்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் வழியாக நிதி உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது... இதில் எந்தெந்த மாவட்டத்துக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

திருச்சி மாவட்டத்துக்கு அதிகபட்சமாக ரூ.440 கோடி கடன் வழங்கப்பட உள்ளது. இதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்துக்கு ரூ.240 கோடி, திருவண்ணாமலைக்கு ரூ.210 கோடி, சேலத்துக்கு ரூ.177 கோடி, ஈரோட்டுக்கு ரூ.170 கோடி, தர்மபுரிக்கு ரூ.165 கோடி, கோவைக்கு ரூ.140 கோடி என கடன் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அரசு மானியம்-

அதுமட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க அரசு சார்பிலும் பல்வேறு மானிய உதவிகள் உள்ளன. தேசிய கால்நடை இயக்கத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆடு, செம்மறியாடு, பன்றி, கோழி வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு முதலீட்டு மானிய உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக ஆடு அல்லது செம்மறியாடு வளர்ப்பு பண்ணைகளுக்கு திட்டத்தின் அடிப்படையில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் கிடைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இப்படி கடன் மட்டுமல்லாமல், மானிய உதவியும் இருப்பதால், விவசாயத்துடன் கால்நடை அல்லது பிற வேளாண் சார்ந்த தொழிலை சேர்த்து செய்ய நினைப்பவர்களுக்கு இது முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

பழைய பயிர்க்கடன் - தேதி பாருங்க

இதனிடையே, ஏற்கனவே பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கும் கூட்டுறவுத்துறை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது, வேளாண் சாகுபடிக்காக பெறப்பட்ட பயிர்க்கடனை முழுமையாக நிலுவையில்லாமல் செலுத்திய விவசாயிகளுக்கு, இந்த மாதம் 30-ம் தேதிக்குள் புதிய கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால், பழைய பயிர்க்கடனை முழுமையாக அடைத்த விவசாயிகள், புதிய கடன் பெறுவதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர். ஒருபக்கம் விவசாயத்துடன் இணைந்த தொழில்களுக்கு வட்டியில்லா கடன்.. மறுபக்கம் பழைய கடனை முறையாக செலுத்தியவர்களுக்கு புதிய பயிர்க்கடன்.. விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு கவனம் பெறும் வகையில் அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+