என்னது விவசாயிகள் தீ வைத்தனரா? அப்பாவி பழங்குடிகள் மீது அநியாயமாக பழிபோடும் சென்னை ட்ரெக்கிங் கிளப்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குரங்கணி தீ விபத்து- சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம்- வீடியோ

  சென்னை: குரங்கணி வனப்பகுதியில் விவசாயிகள் தான் தீ வைத்துள்ளனர் என ட்ரேக்கிங் கிளப் குற்றம்சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் சென்னையை சேர்ந்த ஒரு குழுவினரும் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு குழுவினரும் ட்ரெக்கிங் மேற்கொண்டிருந்தனர்.

  சுமார் 36 பேர் இந்த ட்ரெக்கிங் பயணத்தை மேற்கொண்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை குரங்கணி வனப்பகுதியில் எதிர்பாரத விதமாக காட்டுத்தீ ஏற்பட்டது.

  படுகாயம்

  படுகாயம்

  இதில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 16 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  பலி எண்ணிக்கு உயர்வு

  பலி எண்ணிக்கு உயர்வு

  இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிஷா நேற்று மாலை உயிரிழந்தார். இன்று திவ்யா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  ட்ரெக்கிங் கிளப் விளக்கம்

  ட்ரெக்கிங் கிளப் விளக்கம்

  இதனால் உயிரிழப்பு 11 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை ட்ரெக்கிங் கிளப் இன்று விளக்கமளித்துள்ளது.

  தீ வைத்தனர்

  தீ வைத்தனர்

  வனப்பகுதிக்கு விவசாயிகள் தான் தீ வைத்தனர் என சென்னை ட்ரெக்கிங் கிளப் குற்றம்சாட்டியுள்ளது. குரங்கணி வனப்பகுதிக்கு சென்றபோது அங்கு காட்டுத்தீக்கான அறிகுறி இல்லை என்றும் சென்னை ட்ரெக்கிங் கிளப் தெரிவித்துள்ளது.

  காற்றின் வேகம்

  காற்றின் வேகம்

  மேலும் 11ஆம் தேதி கீழே இறங்கும் போது தான் விவசாயிகள் தீ வைத்து விட்டதாகவும் அந்த கிளப் குற்றம்சாட்டியுள்ளது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியதாகவும் அந்த கிளப் தெரிவித்துள்ளது.

  முதுவர் இன மக்கள்

  முதுவர் இன மக்கள்

  குரங்கணி, கொழுக்குமலை வனப்பகுதியில் முதுவர் இன பழங்குடிகளே ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்து வருகின்றனர். முதுவர் இன மக்கள் மீனாட்சி அம்மனையே குலதெய்வமாய் வழிபட்டு வருகின்றனர்.

  காற்றின் வேகம் தெரியாதா?

  காற்றின் வேகம் தெரியாதா?

  பல ஆண்டுகளாக வனத்தில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு காற்றின் வேகம் மற்றும் திசை தெரியாதா? எங்கு தீ வைத்தால் எந்த திசையில் பரவும்? கோடைக்காலத்தில் தீ வைத்தால் அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கூடவா வனத்திலேயே வாழும் ஆதி பழங்குடிகளுக்கு தொரியாது.

  குற்றச்சாட்டால் அதிர்ச்சி

  குற்றச்சாட்டால் அதிர்ச்சி

  15 நாட்களாக குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ட்ரெக்கிங் கிளப், விவசாயிகள் தான் தீ வைத்தனர் என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  அநியாயமாக பழி போட்டுள்ள

  அநியாயமாக பழி போட்டுள்ள

  காசு ஒன்றை மட்டுமே குறியாக கொண்டு அப்பாவி மக்களின் உயிரை துச்சமென கருதி ட்ரெக்கிங் அழைத்து சென்ற சென்னை ட்ரெக்கிங் கிளப் தான் தப்பிப்பதற்காக அநியாயமாக பழங்குடி மக்கள் மீது பழியை போட்டுள்ளது.

  கிளப்புக்கு கண்டனம்

  கிளப்புக்கு கண்டனம்

  வனத்தில் வசிப்பவர்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கே எப்படி தீ வைப்பார்கள்? அப்படி தீ வைத்தால் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஆதிகுடி மக்களுக்கு தெரியாதா? தான் தப்பித்துக்கொள்ள பழங்குடி மக்கள் மீது பழி போடும் ட்ரெக்கிங் கிளப்புக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai Trekking club has said that Farmers only keeps fire in the forest.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற