For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மச்சி.. ஓப்பன் தி ஸ்கை.... பேஸ்புக்கில் தெறிக்க விடும் மக்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: வெளியில் தலை காட்ட முடியவில்லை. முழுக்க நனைஞ்சு போகும் நிலைமை. வீட்டுக்குள்ளும் இருக்க முடியலை.. கடும் குளிர். இப்படிப்பட்ட ஒரு சிலாகிப்பான சூழல் வருடத்திற்கு ஒருமுறைதான் சென்னை மக்களுக்குக் கிடைக்கும். இதை விதம் விதமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது சென்னை.

பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும், மழை நிலவர அப்டேட்டுகளை செய்தித் தளங்களை விட படு ஜோராக தந்து கொண்டிருக்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். கூடவே ஜாலியான கமெண்டுகளையும் கோர்த்து விட்டபடி.

இது பேஸ்புக்கில் கண்ட சில பதிவுகளின் தொகுப்பு.. படிச்சுப் பாருங்க.. மழைக்கு சற்று இதமாக இருக்கும்.

அறிவிப்பாரா அம்மா

அறிவிப்பாரா அம்மா

இது முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடப்பட்டுள்ள வேண்டுகோள். சென்னையில் படகு சர்வீஸை தொடங்குவது குறி்த்து 110 விதியின் கீழ் அறிவிக்க கோரிக்கை விடுப்பவர் உங்கள் ராம . சுகந்தன்... டைமிங் வென் ரெய்னிங்!

இவரது கவலையைப் பாருங்க மக்களே

இவரது கவலையைப் பாருங்க மக்களே

அருண் கோபால் என்பவரின் பதிவில் அவரது கவலை வெளிப்படுகிறது. இவர் ஊருக்கு வந்த நேரம் பார்த்து பொத்துக்கிட்டு ஊத்திய வானத்தால் கவலையாகி விட்டார் போலும்.

அண்ணா்நகர் கவுன்சிலர் கவனத்திற்கு

அண்ணா்நகர் கவுன்சிலர் கவனத்திற்கு

இது அண்ணாநகரைச் சேர்ந்த ஹரீஷ் குப்புசாமி விடுத்துள்ள வேண்டுகோள். உடனே படகுகளை அனுப்புமாறு தனது ஏரியா கவுன்சிலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார் பேஸ்புக் மூலமாக.. கவுன்சிலர் பார்த்தாரோ, போட்டு போனதோ என்னவோ..!

அரசியல் மழை!

அரசியல் மழை!

இது சற்று அரசியல் வாடை வீசும் மழை போலத் தெரிகிறது. இவரது பதிவைப் பார்த்தால். வேளச்சேரி ஜாஸ் சினிமாஸில் படம் பார்க்க டிக்கெட் வாங்கியிருந்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றம். காரணம், ஏரியாவே வெள்ளத்தில் மிதப்பதால்.

நீந்தி வாங்க பாஸ்

நீந்தி வாங்க பாஸ்

சென்னை மக்கள் இன்று அலுவலகங்களுக்கு நீச்சலடித்து நல்லபடியாக வந்து சேர்ந்தார்கள் என்று இந்தப் பதிவு சொல்கிறது. ரோடெல்லாம் அவ்ளோ கேவலம் என்பதை இவர் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

ஆஹா..!

ஆஹா..!

இது அட்வான்ஸ் திங்கிங் பதிவு. சென்னை நகரம் இப்போது இப்படித்தான் உள்ளது. மக்களும் இப்படி ஆகி விட்டார்களாம்.

நீச்சலடிக்காத் தெரியாதவங்களுக்காக அச்சச்சோ!

நீச்சலடிக்காத் தெரியாதவங்களுக்காக அச்சச்சோ!

இந்தப் பதிவர் சென்னையில் இருந்து கொண்டு நீச்சலடிக்கத் தெரியாமல் இருப்பவர்களுக்காக அச்சச்சோ போட்டுள்ளார் இப்பதிவில்.

மழை நீர் சேகரிப்புநகரம்!

மழை நீர் சேகரிப்புநகரம்!

ராம சுகந்தனின் இன்னொரு பதிவு இது. ஒட்டுமொத்த நகரையுமே மழை நீர் சேகரிப்பு மையமாக மாற்றி விட்டாரோ முதல்வர் என்று கேட்டுள்ளார் ராம சுகந்தன்.

ஆசை தோசை அப்பளம் வடை

ஆசை தோசை அப்பளம் வடை

இப்படியே மழை பெய்தால் மாதம் மூன்று நாள் விடுமுறை கிடைக்குமே என்ற நப்பாசையை வெளிப்படுத்துகிறார் இந்த அன்பர்.

'வாட்டர்' ரயில்!

'வாட்டர்' ரயில்!

இது அனு ராஜேந்திரன் என்பவர் போட்டுள்ள மழை ரயில் பதிவு. நீரில் மூழ்கிக் கிடக்கும் தண்டவாளங்கள்.. அதன் மீது ஓடும் ரயில்... ரயில்வேயின் புதிய தண்ணீரில் ஓடும் ரயில் என்ற குறும்புக் கமெண்ட்டுடன்.

தெறிக்க விட்டுட்டாய்ங்க!

தெறிக்க விட்டுட்டாய்ங்க!

இது அல்டிமேட்... விளக்கம் தேவையே இல்லை.. படிச்சுப் பார்த்து புரிஞ்சுக்கோங்க.. !

English summary
FB posts are flooded about the rain in Chennai and its sub urbs withd timing captions and photographs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X