For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போரை நிறுத்த பிரபாகரன் ஒப்புக்கொள்ளவில்லை: ப.சிதம்பரம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதியதலைமுறை டிவியில் அக்னிப் பரிச்சை நிகழ்ச்சியில் பேசிய சிதம்பரம், இன்றைய அரசியல் நிலை, சிவகங்கை தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தமிழக அரசின் தடை, லோக்சபா தேர்தல் கூட்டணி, ராஜீவ் படுகொலை, இலங்கை இறுதிக்கட்டப் பட்ட போர் நிலவரம் பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த நல்ல திட்டங்களையும் ப.சிதம்பரம் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் உள்ளதே என்ற கேள்விக்கு பதில் சொன்ன அவர், ஸ்ரீபெரும்புதூருடன், மறைமலைநகருடன் சிவகங்கை தொகுதியை ஒப்பிடக்கூடாது என்றார்.

தனித்து விடப்பட்டது

தனித்து விடப்பட்டது

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க யாரும் முன்வரவில்லை. முன்பு அதிமுக, திமுக போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸ் கூட்டணியை விரும்பின. தமிழகத்தில் கூட்டணி யார் என்று தெரியவில்லை. இதேபோல சில மாநிலங்களில் உள்ளது.

தமிழர்களின் பிரச்சினை

தமிழர்களின் பிரச்சினை

மீனவர்கள் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட தமிழர்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகளுக்கு மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் துணை நிற்கவில்லையே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சரியான பதிலை மத்திய அமைச்சரால் சொல்ல முடியவில்லை.

இலங்கைப் போர்

இலங்கைப் போர்

இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் நிறுத்தவில்லை. ராஜபக்சேவும், பிரபாகரனும் ஒரே பிடிவாதத்துடன் போராடினார்கள். போரை நிறுத்த இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்திய அரசாங்கம் போரை நிறுத்தச் சொல்லி பிரபாகரனிடம் சொல்லியும் கடைசிவரை ஒத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் அவர் மரணமடைய நேரிட்டது. இந்தியா சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்.

மீனவர்கள் பிரச்சினை

மீனவர்கள் பிரச்சினை

மீனவர்கள் பிரச்சினையில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், இருதரப்பு மீனவர்களையும் அழைத்துப் பேசவும் இந்திய அரசு தயார். ஆனால் தமிழக அரசு தேதி குறிப்பிடவில்லை.

தனி தொலைக்காட்சி

தனி தொலைக்காட்சி

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் எல்லோருக்கும் தொலைக்காட்சி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு தொலைக்காட்சி இல்லை. இரண்டு தொலைக்காட்சிகளை காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நடத்தினாலும் அது மக்களிடம் சென்றடைவதற்கான தாக்கம் இல்லை.

ராஜீவ் கொலை வழக்கு

ராஜீவ் கொலை வழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை முடிந்து தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. விசாரிக்கப்பட வேண்டியவர்கள் இன்னமும் இருக்கிறார்களா? தற்போதைக்கு நிலவும் கருத்துக்கள் வாக்கு மூலம் அல்ல. பிற்காலத்தில் எழுந்த சிந்தனை

கார்த்திக்கேயன் தலைமையில் விசாரணை

கார்த்திக்கேயன் தலைமையில் விசாரணை

அவர்கள்தான் வழக்கைத் தொடர்ந்தார்கள். கார்த்திக்கேயன்தான் கருத்து சொல்ல வேண்டும். என்னால் கருத்துச் சொல்ல முடியாது.

மறு விசாரணை

மறு விசாரணை

விசாரணையில், தீர்ப்பில், சந்தேகம் உள்ளது என்ற பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மனுதாக்கல் செய்து மறு விசாரணை நடத்தக் கோர வேண்டும். நிராபராதி என்று வரும் பட்சத்தில் அதை அரசு ஏற்றுக்கொள்ளும். அதற்காகத்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Finance Minister P.Chidambaram gave Exclusive Interview to Puthiya Thalaimurai TV Channel. In this Interview, P.Chidambaram discusses about the Prime Ministerial Candidate from Congress Party, Present Political situation in Tamilnadu, His Contribution to his Sivaganga Lok Sabha constituency, His life after Politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X