சிவராத்திரி அன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தீவிபத்து... பக்தர்கள் வேதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிவராத்திரி அன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தீவிபத்து

  திருவாரூர்: திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் உள்ள மகாலட்சுமி சன்னதியில் அதன் அலங்கார உடையில் தீப்பிடித்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

  இன்று சிவராத்திரி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சிவாலயங்களில் 4 கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  Fire accident in Tiruvarur Thiyagarajar Koil

  அதையொட்டி சிவாலயங்களில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தற்போது தீவிபத்து நடைபெற்றது.

  அங்குள்ள அம்மன் சன்னதியில் உள்ள மகாலட்சுமியின் அலங்கார உடையில் தீப்பிடித்தது. இதை கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

  சிவராத்திரி அன்று மகாலட்சுமி உடையில் தீப்பிடித்ததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். சமீபகாலமாக கோயில்களில் நடைபெறும் தீவிபத்துகளால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ள நிலையில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலில் தீவிபத்து நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து, திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயிலின் ஸ்தல விருட்சம் பற்றி எரிந்தது உள்ளிட்டவை ஏற்பட்டது நினைவுக்கூரத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Fire accident happens in Tiruvarur Thiyagarajar koil. As today is Sivaratri, devotees are so sad about this fire accident.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற