For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. பேரிடர் மீட்பு குழு விரைவு

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையிலுள்ள, சிப்காட் வேதியியல் தொழிற்சாலையொன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

வேலூர்: ராணிப்பேட்டையிலுள்ள சிப்காட் வேதியியல் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சிப்காட் தொழிற்சாலையின் பேஸ்3ல் குஜராத்தை சேர்ந்த என்விரான் மென்டல் மேனுபேக்சரிங் என்ற பெயரில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தேவையற்ற பொருட்கள் மறுசுழற்சி முறையில் வேதிபொருட்களாக மாற்றப்படுகின்றன. அந்த வேதிபொருட்கள் சிமெண்ட் தயாரிப்பு கம்பெனிகளில் பயன்படுத்தப்படுகிறது.

Fire broke out at Sipcot

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் தொழிற்சாலை மூடப்பட்டிந்தது. 2 காவலாளிகள் மட்டும் பணியில் இருந்தனர். இந்நிலையில், இன்று காலையில் தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீ தொழிற்சாலையின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீ அணைத்தனர். இதனால் சிப்காட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, ரசாயன ஆசை தீவிபத்து தொடர்பாக, அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Fire broke out at Sipcot in Ranipet area near Vellore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X