நடுரோட்டில் பெண்ணைத் தாக்கிய தீயணைப்பு வீரர்... திரண்ட பொதுமக்கள்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

துறையூர்: துறையூர் பேருந்து நிலையம் அருகே பெண் ஒருவரை தீயணைப்புத்துறை அலுவலர் பலர் முன்னிலையில் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துறையூர் சோபனாபுரத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் தனக்குத் தெரிந்த பெண்ணிடம் கடன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் வரதாஜனிடம் கொடுத்த கடனை கேட்ட போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

 Fire service officer attacked a woman in bus stand

உடனே அப்பெண் தன் உறவினரான தீயணைப்புத் துறை அதிகாரியிடம் கூறியுள்ளார். அவர் அங்கு வந்து, வரதராஜன் மனைவி சிவகாமியிடம் சண்டை போட்டுள்ளார்.மேலும் வாய்த்தகராறு முற்றியதில் அவர் சிவகாமியை தாக்கியுள்ளார்.

இதனைக் கண்ட பொதுமக்கள், ''ஒரு பெண்ணை நடுரோட்டில் அடிக்கலாமா?" எனத் தீயணைப்புத் துறை அதிகாரியிடம் கேட்டதும் அவர் அவ்விடத்திலிருந்து சென்று விட்டார். இந்த சண்டை நடைபெற்றபோது அதனை பலரும் தங்கள் செல்போனில் படம் பிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Thuraiyur bus stand a fire service officer attacked a woman in money matter and people raised question about the attack to the officer and he went off from that place.
Please Wait while comments are loading...