பட்டாசுக்கு 28% ஜிஎஸ்டி.. எப்படி பிழைப்பது.. உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டியை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும்
ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

பட்டாசு உற்பத்திக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதித்திருப்பதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை குறைக்க மத்திய அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

காலவரையற்ற போராட்டம்

காலவரையற்ற போராட்டம்

எனவே, ஜிஎஸ்டி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர் பட்டாசு உற்பத்தியாளர்கள். இதனால் சிவகாசிப் பகுதியில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

8 லட்சம் பேர் பாதிப்பு

8 லட்சம் பேர் பாதிப்பு

பட்டாசு உற்பத்திக்கு ஜிஎஸ்டியில் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

15 சதமாக குறைக்க கோரிக்கை

15 சதமாக குறைக்க கோரிக்கை

இதனை 15 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 811 பட்டாசு உற்பத்தி ஆலைகள் பங்கேற்றுள்ளன.

நள்ளிரவு முதல் அமல்

நள்ளிரவு முதல் அமல்

இந்தியா முழுவதும் இதுபோன்று ஜிஎஸ்டியால் பாதிக்கப்படுவோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தாலும், எதையும் கண்டு கொள்ள தயாராக இல்லை பாஜக அரசு. இன்று நள்ளிரவு கோலாகலமாக ஜிஎஸ்டி அறிமுக விழாவை பாஜக கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Firecracker producing units in Sivakasi has started indefinite strike against GST today.
Please Wait while comments are loading...