For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறந்த தந்தைக்கு "உயிர்" கொடுத்த மகள்கள்.. தமிழகத்தில் முதல்முறையாக பட்டுக்கோட்டையில் நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

தஞ்சை: சகோதரியின் திருமணத்திற்காக, உயிரிழந்த தந்தையை மீண்டும் சிலையாக கொண்டு வந்து, இன்ப அதிர்ச்சி கொடுத்த சகோதரிகள். தமிழகத்தில் முதன்முறையாக பட்டுக்கோட்டையில் நெகிழ்ச்சியான சம்பவம்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மூன்று மகள்கள். முதல் இரண்டும் மகளுகளுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில், எதிர்பாராதவிதமாக செல்வம் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார்.

First time in Tamilnadu, silicon statue for death man

அவர் உயிரிழந்து எட்டு ஆண்டுகள் ஆகியும், அவரது செல்ல மகள் திருமணத்தில் செல்வம் இல்லாதது, அவரது குடும்பத்திற்கு வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடைசி மகளுக்கு மறையாத சோகமாகவும் இருந்துள்ளது.

First time in Tamilnadu, silicon statue for death man

மணமகளின் வருத்ததை போக்குவதற்காக 6 லட்சம் செலவில், மூத்த சகோதரி புவனேஷ்வரி சிலிக்கானை கொண்டு தந்தையின் முழு உருவ சிலையை வடிவமைத்து சகோதிரிக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

மோடி அரசின் மோசடி பட்ஜெட்.. பொதுத் துறையை தாரை வார்ப்பதுதான் சுய சார்பு இந்தியாவா?.. வேல்முருகன்மோடி அரசின் மோசடி பட்ஜெட்.. பொதுத் துறையை தாரை வார்ப்பதுதான் சுய சார்பு இந்தியாவா?.. வேல்முருகன்

இதை கண்ட மணமகள் லட்சுமி பிரபா மற்றும் அவரது உறவினர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உயிருடன் இல்லாத தன் தந்தையின் சிலைக்கு முன்பு மணமக்கள் மாலை மாற்றிக், தாய், தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

English summary
First time in Tamilnadu, elder sister made silicon statue of her death father to particpate in her last sister marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X