For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமாவரத்தில் "எம்.ஜி.ஆர். வீட்டில் கிராமபோன், பரிசுப் பொருட்கள் அனைத்தையும் வாரிசுருட்டிய வெள்ளம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லத்தில் 20 அடியரத்துக்கு அடையாறு ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. அங்கு இருந்த எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் வெள்ளம் வாரிச் சுருட்டு கொண்டுபோய்விட்டது.

சென்னை புறநகரான ராமாவரத்தில் அடையாறு ஆற்றின் கரையோரம் எம்.ஜி.ஆர் வசித்த வீடு உள்ளது. அங்கு காது கேளாத குழந்தைகளுக்கு பள்ளி ஒன்றும் நடத்தபட்டு வருகிறது.

Flood waters wash away rare Materials from MGR House

செம்பரம்பாக்கம் ஏற்றில் திறந்துவிடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க, அடையாற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் சென்னை நகரின் தென்பகுதியை அப்படியே மூழ்கடித்தது.

சென்னை புறநகரான ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் சுமார் 20 அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்தது. அங்கு இருந்த குழந்தைகள் 2-வது மாடியில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

2 நாட்களாக தத்தளித்த அவர்களை மீனவர்கள் குழு ஒன்று படகுடன் சென்று மீட்டது. இந்நிலையில் இன்று வெள்ளம் வடிந்தது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டில் வசித்து வந்த எம்.ஜி.ஆர்- ஜானகி அம்மாள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இன்று அங்கு திரும்பினர்.

அங்கு தரைதளத்தில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கிராமபோன், பரிசுப் பொருட்கள், எம்.ஜி.ஆர். தொடர்பான ஆவணங்கள், எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மாள் பயன்படுத்திய பொருட்கள் என எல்லாவற்றையும் வெள்ளம் வாரி சுருட்டிக் கொண்டு போய்விட்டது. அந்த வீடே அலங்கோலமாக கிடக்கிறது.

இதனால் அவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

English summary
Adyar Flood waters washed away rare Materials from MGR's residence in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X