இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

தினமும் 3 பேர் உதவி கேட்கிறார்கள்.. என்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி.. அதிர்ச்சி ஆய்வு

By Shyamsundar
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   என்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி- வீடியோ

   சென்னை: சமீப காலங்களில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. வெளிநாட்டில் தங்கள் மகள் வாழ்வது பலருக்கு பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கிறது.

   தமிழ் சினிமா கூட என்.ஆர்.ஐ ஆண்களை காமெடியன்களாக மட்டுமே காட்டி இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் குரூரம் தற்போது வெளியாகி இருக்கும் கணக்கெடுப்பு மூலம் தெளிவாகி இருக்கிறது.

   இந்திய வெளியுறவுத்துறைக்கு எத்தனை புகார்கள் இதுவரை வந்துள்ளது, என்ன மாதிரியான புகார்கள் இதுவரை வந்து இருக்கிறது என்பது போன்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

   எவ்வளவு

   எவ்வளவு

   கடந்த 2015 ஜனவரி 1ல் இருந்து நவம்பர் 30, 2017 இடையே இருக்கும் 1,064 நாட்களில் மொத்தம் 3,328 பெண்கள் தங்கள் கணவன் குறித்து புகார் அளித்து இருக்கிறார். சராசரியாக ஒருநாளைக்கு 3 புகார்கள் வருகிறது. சரியாக சொல்வதென்றால் 8 மணி நேரத்திற்கு ஒரு புகார் வருகிறது.

   மாநிலம்

   மாநிலம்

   அனைவரும் எங்களை எப்படியாவது கணவனிடம் இருந்து காப்பற்றுங்கள் என்று உதவி கேட்கிறார்கள். அதிகமான புகார்களை பஞ்சாப்பில் இருந்து வெளிநாட்டில் மணமுடித்த பெண்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு அடுத்து ஆந்திரா தெலுங்கானா பெண்கள். அதற்கு அடுத்தபடியாக குஜராத் பெண்கள் புகார் கொடுக்கிறார்கள்.

   காரணம்

   காரணம்

   பெரும்பாலும் வரதட்சணை கொடுமை காரணமாக இப்படி போன் வருகிறது. குடித்துவிட்டு தொல்லை செய்யும் ஆண்கள் இருக்கிறார்கள். அதுபோல் வேறு பெண்களுடன் வாழும் ஆண்களும் இதில் இருக்கிறார்கள். ஆந்திராவில் இருந்து அதிக வரதட்சணை சம்பந்தமான போன் வருகிறது.

   என்ன நடக்கிறது

   என்ன நடக்கிறது

   சிலர் மிகவும் கொடூரமாக கூட நடந்து கொள்கிறார்கள். மனைவிகளை அடிப்பது, துன்புறுத்துவது என நடந்து கொள்கிறார்கள். சிலர் மனைவிகளின் பாஸ்போர்ட்களை கிழித்து போட்டுவிட்டு அநாதையாக அலைய விட்டும் இருக்கிறார்கள்.

   இன்னும்

   இன்னும்

   இந்த புகார்கள் எல்லாம் நேரடியாக வெளியுறவுத்துறைக்கு வந்த புகார் மட்டுமே. பல புகார்கள் வக்கீல்களிடமும், குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் சொல்லப்பட்டு இருக்கிறது. இதில் பல புகார்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கும் விஷயம் ஆகும்.

   வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

   English summary
   The Ministry of External Affairs of India (abbreviated as MEA) says that for every 8 hours one Indian NRI wife calls home for help. They mostly belong to Punjab, Andhra, Telugana and Gujarat region.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more