ஜானகிக்கு மெரினாவில் இடம் தராத கருணாநிதிக்கும் இடம் இல்லையாம்.. அரசு வாதம்
Recommended Video

சென்னை: முன்னாள் முதல்வர் ஜானகி அம்மாளுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி ஒப்புதல் தரவில்லை என்று அரசு தரப்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க இடம் அளிக்க மறுக்கும் தமிழக அரசு உத்தரவுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு, ஹைகோர்ட் தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தனது அறிக்கையில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மெரினாவில் இடம் தர முடியாது என கூறிய நிலையில், இப்பொழுது அதிமுகவின் முன்னாள் முதல்வராக இருந்த ஜானகி அம்மாளுக்கு அவர் மறைந்தபோது மெரினாவில் நினைவிடம் அமைக்க கருணாநிதி மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மெரினாவின் பாதுகாப்பதுதான் நினைவிடத்திற்கு எதிரான காரணம் என்று தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவு இப்போது பல்வேறு பரிணாமங்களை பெறுகிறது.
ஜானகி அம்மாள், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 23 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். எந்த தொகுதியும் எம்எல்ஏவாக கூட தேர்ந்தெடுக்கப்படாதவர். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை பறிகொடுத்துவிட்டு ஜெயலலிதா அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல அனுமதித்தவர். அவரை 13 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக உள்ளவரும், 5 முறை முதல்வராக இருந்தவரும், பல துறை வித்தகருமான கருணாநிதியை ஜானகியோடு ஒப்பிட்டுள்ளது அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications