நாட்டின் தேர்தல் முறையில் பெரும் சீர்திருத்தம் கொண்டுவந்த டி.என்.சேஷன் இப்போ முதியோர் இல்லத்தில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது மனைவியுடன் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நிர்கதியான நிலையில் உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முறையில் முக்கிய சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்று பெருமைக்கு சொந்தக்காரர் டி.என்.சேஷன். இந்திய தேர்தல் தலைமை ஆணையராகப் பணியாற்றி முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வந்த டி.என்.சேஷன் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் தமது மனைவியுடன் வசித்து வருகிறார்.

Commissioner

பாலக்காட்டை சேர்ந்தவரான சேஷனுக்கு சொந்த ஊரில் வீடு இருந்தாலும், நோய்களுடன் போராடும் முதிய வயதில் கவனித்துக் கொள்ள பிள்ளைகள் இல்லாததால் முதியோர் இல்லத்தை நாடிச் சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு குழந்தைகள் இல்லாததாலும், பார்த்துக்கொள்ள உறவினர்களும் தயாராக இல்லாததாலும் இந்த இக்கட்டான நிலையில் நிர்கதியாக சேஷன் தவிக்கவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரிய பதவி, கைநிறைய பணம் ஆகியவை இருந்து முதுமையில் அரவணைப்பில்லாத நிலை என்பது கொடுமையிலும் கொடுமை என்பதை உணர்த்துகிறது சேஷன் வாழ்க்கை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
T N Seshan, former Chief Election Commissioner who is credited for reforming the electoral polity in India, is currently living in an old age home in Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற