மாஜி அமைச்சரின் அண்ணன் சிவகங்கை அருகே கார் விபத்தில் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: சிவகங்கை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் சகோதரர் உயிரிழந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் கோகுல இந்திரா. இவரது அண்ணன் தேவ பாண்டியன்.

Former Minister Gokiula Indira's brother Deva pandiyan dead in a accident

52 வயதான இவர், சிவகங்கையை அடுத்த ஒக்கூர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணாநகர் பகுதியில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கோகுல இந்திராவின் அண்ணன் தேவபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Minister Gokula Indira's brother Deva pandiyan died in a accident near Sivagangai. His car met with an accident in this accident he died on the spot.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற