அரசு அசத்தல்.. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேரும் திருநங்கைகளுக்கு இலவச கல்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேரும் திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Free education will be provided to the transgenders joines in the Manonmaniam Sundaranar University : Minister Anbazhagan

அண்ணா பல்கலைகழகத்துக்கு 4 மாதத்தில் துணை வேந்தர் நியமனம் செய்யப்படுவார் என்றும் அன்பழகன் கூறினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேசிய உயர்கல்வி திட்டத்தின் நிதியுதவியுடன் வைபை வசதி அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேரும் திருநங்கைகளுக்கு இலவசகல்வி வழங்க திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கேபி அன்பழகன் சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Higher Education Minister Anbazhagan said that free education will be provided to the transgenters who are joines in the Manonmaniam Sundaranar University. The Minister also said that 3000 rupees will be awarded for further education to the transgenders.
Please Wait while comments are loading...