கடலூரில் வெள்ள பாதிப்பு: நெல்லிக்குப்பத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்
கடலூர்: கடலூரில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னார்வலர்களும், அரசும் ஆங்காங்கே மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. நாளை 20.12.2015 ஞாயிற்று கிழமை தன்னார்வலர்களால் நெல்லிக்குப்பத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரலாறு காணாத கனமழையால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் கோவில்கள், திருமண மண்டபங்களில் தஞ்சம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வடிந்த நிலையில் மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் சார்பாக செல்லாங்குப்பத்தில் அம்மன் கோயில் அருகில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நிலவேம்பு கஷாயம் 200 நபர்களுக்கு சம்பத் , உதயகுமார் ஆகியோர் நேரடியாக வழங்கினார்கள்.
தற்பொழுது டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களை தடுப்பதற்காக மருத்துவ முகாம்களில் நிலவேம்பு கஷாயம் கொடுப்பதும், பிளிச்சிங் பவுடர் வழங்குவதும், திரவ பொருள் குளோரின் வழங்குவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நிலவேம்பு கஷாயம் 4.5 லட்சம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கஷாயம் 9 வகை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது. அனைத்து வகையான காய்ச்சல்களுக்கும் தடுப்பு மருந்தாக செயல்படுகிறது.
இந்த கஷாயத்தை பவுடராக வழங்கப்படுகிறது. அதேபோல சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு திரவ குளோரின் வழங்கப்பட்டு வருகிறது. பிளிச்சிங் பவுடர் இதுவரை 20 டன் சுகாதாரத்துறை மூலமாக பெறப்பட்டு அனைத்து முகாம்களில் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் 80 சுகாதார ஆய்வாளர்களுக்கு திரவ குளோரினை அமைச்சர்கள் சம்பத் - உதயகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.
இலவச மருத்துவ முகாம்
இதனிடையே நாளை 20.12.2015 ஞாயிற்று கிழமை தன்னார்வலர்களால் நெல்லிக்குப்பத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ முகாமில் 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் பயன் பெறும் நோக்கில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்தவ கல்லூரியை சார்ந்த முதுகலை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தி, பல தன்னார்வலர்களால் நன்கொடையாக வழங்கிய தரம் வாய்ந்த மருந்துகள் வழங்க பட உள்ளன. இந்த மருத்துவ முகாமை நெல்லிக்குப்பம் சுற்றி உள்ள கிராமத்து மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமார் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு ராம் ராஜேஷ் குமார் +91 94877 81421,91 96264 19172.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications