For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரைக்குடி அரசு பள்ளியில் புதிய மாணவர்களை கொண்டாடும் விழா

காரைக்குடி அரசு பள்ளியில் புதிய மாணவர்களை கொண்டாடும் விழா நேற்று நடைபெற்றது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று புதிய மாணவர்களை கொண்டாடும் விழா நடைபெற்றது.

பள்ளி இன்டராக்ட் சங்க மாணவர்கள், புதிய மாணவர்களை கை குலுக்கியும், இனிப்பு கொடுத்தும் வரவேற்றனர். மேலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் , மருத்துவராக, பொறியியல் நிபுணராக, இராணுவ வீரராக, விமான ஓட்டுனராக, பள்ளி முதல்வராக வேடமணிந்து , "இலக்கை நோக்கி பயணியுங்கள்" என்ற பதாகைகளுடன் அவர்களை வரவேற்றனர்.

வாழ்த்துரை

வாழ்த்துரை

இவ்விழாவில் தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா வரவேற்றார். அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் வில்லியம் வாழ்த்துரை வழங்கினார்.

மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்கள் பள்ளியில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், சுற்றுப்புறத் தூய்மையின் அவசியம் குறித்தும், தாய் தந்தையருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் கூறி, தலைமையாசிரியர், அறிவுரை வழங்கினார்.

புதிய மாணவர்கள்

புதிய மாணவர்கள்

மாணவர்களுக்கு விடுகதைகள், வார்த்தை விளையாட்டு, பொது அறிவு வினாக்கள் போன்றவைகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. புதிய மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.

ஏற்பாடுகள்

ஏற்பாடுகள்

பட்டதாரி ஆசிரியர் திருமதி. மீனாட்சி நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி ஜெயம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் முத்துவேல்ராஜன் அவர்கள் செய்திருந்தார்.

English summary
Freshers day celebrated in Karaikudi School. Students come in fancy dress like Army man, Doctor, Engineer etc.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X