For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2011ல் ஒரு மாதம் கழித்து நடந்த தமிழக வாக்கு எண்ணிக்கை.. இந்த முறை "நோ வெயிட்டிங்"!

Google Oneindia Tamil News

சென்னை: 2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின்போது வாக்குப் பதிவு முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை வாக்கு எண்ணிக்கைக்காக காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. வாக்குப்பதிவு முடிந்த 3 நாட்களிலேயே வாக்கு எண்ணிக்கை வந்து விட்டது.

தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை அதிகாரப்பூர்மாக இன்று அறிவித்தார்.

Gap between voting and counting comes down this time

இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் மேற்கு வங்கத்திற்கு 6 கட்டங்களாகவும், அஸ்ஸாம் மாநிலத்திற்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. ஐந்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக மே 19ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு, ஏப்ரல் 13ம்தேதி வாக்குப் பதிவு நடந்தது. ஆனால் மேற்கு வங்கத்திற்கு 6 கட்ட தேர்தல் நடந்ததால் வாக்கு எண்ணிக்கை அனைவருக்கும் தள்ளிப்போனது. அதாவது மே 13ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதுவரை மற்ற நான்கு மாநிலங்களும் காத்திருந்தன.

ஆனால் இந்த முறை அந்தப் பிரச்சினை இல்லை. வாக்குப்பதிவு முடிந்த 3 நாட்களிலேயே தமிழகத்திற்கு வாக்கு எண்ணிக்கை வந்து விடுவதால் காத்திருப்பும், பதட்டமும் குறைந்து விட்டது.

English summary
The big gap between voting and counting during the last 2011 polls is still in our mind. It was a month gap. But this time it has come down as just 3 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X