வம்பிழுக்கும் காயத்ரி.. ஒத்து ஊதும் ஜூலி.. கத்திக் கதறும் ஜனங்கள்.. அசராத ஓவியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களின் ஓட்டுகளை அள்ளும் ஓவியாவுக்கு காயத்ரியும், ஜூலியும், நமீதாவும் குடைச்சல் கொடுத்து வருவது மக்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி ஏதோ நன்றாக இருக்கும், குடும்பத்துடன் பார்க்கலாம் என்று பொதுமக்கள் பார்க்கத் தொடங்கினர். ஆனால் சீரியல்களை காட்டிலும் எத்தனை வன்மம், பொய், பித்தலாட்டம் என்று மக்கள் ஆவேசத்தில் உள்ளனர்.

என்னதான் செட்டப் ஷோ என்றாலும் கூட, வெளியில் எத்தனைதான் திட்டிக் கொண்டாலும் கூட ஷோ ஆரம்பித்ததும் முதல் ஆளாகப் போய் மக்கள் டிவி முன் உட்காருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

மக்களை கவரும் ஓவியா

மக்களை கவரும் ஓவியா

சிறிய வயது என்றாலும் மிகவும் பக்குவத்தோடு நியாயமாக பேசி, யார் வம்பு தும்புக்கும் போகாதவர் ஓவியா. அவரின் செயல்பாடுகளை பார்க்கும் மக்கள் அவர் இந்த நிகழ்ச்சியில் தொடர அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர். இது அந்த பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண், பெண் ஆகியோருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலி என்ற விஷப்பாம்பு

ஜூலி என்ற விஷப்பாம்பு

கண் இரண்டும் நட்டுக்குத்தாகியபடி மக்களின் ஓட்டுகளை அள்ளுவதற்காக சீன் போட்ட ஜூலியை பக்கத்தில் இருந்து கவனித்தவர் ஓவியாதான். ஆனால் அந்த நன்றி மறந்து விட்டு ஓவியாவிடம் அத்தனை புலம்பல் செய்துவிட்டு, காயத்ரியிடம் பிளேட்டையே திருப்புகிறார் ஜூலி. இவர் விஷப்பாம்பை விட கொடியது என்கிறார்கள் மக்கள்.

தூங்கவிடாமல் துரத்தியடிப்பு

தூங்கவிடாமல் துரத்தியடிப்பு

ஓவியா எப்போது தூங்க வந்தாலும் சரி, காயத்ரி அவரை தேடி வம்பிழுத்து மிகவும் கேவலமான செயல்களை செய்கிறார். அதற்கு ஜால்ரா அடிப்பது ஜூலி. நேற்றைய எபிசோடிலும் இது போல் ஓவியாவை தூங்க விடாமல் அவர் மனதை குத்தும் பாடல்களை பாடி அவரை அந்த அறையில் இருந்து வெளியேற்றினர்.

தூங்க விடாமல் செய்வது பாவம்

தூங்க விடாமல் செய்வது பாவம்

ஒருவரை தூங்க விடாமல் செய்வது எத்தனை பாவம். அதைதான் இவர்களும் செய்கின்றனர். ஒரு மானை 3 சிங்கங்கள் சேர்ந்து துரத்தி துரத்தி வேட்டையாடுவது போல் இவர்களும் செய்து வருகின்றனர். இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியவில்லையா.

பணத்துக்காக...

பணத்துக்காக...

ஓவியா பணத்துக்காக நடிக்கிறார் என்று சமீபத்தில் தாயை இழந்த பெண் என்றும் பாராமல் அவரை கடித்து குதறுவது எந்த விதத்தில் நியாயம். அவரது செயல்பாடுகளில் இருந்து அவரது குணம் எத்தகையது என்பது நன்றாகவே தெரிகிறது.

பொழுதுபோக்காக...

பொழுதுபோக்காக...

கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கு ஒரு கொடுமை ஜிங் ஜிங்னு ஆடிச்சாம் என்பதை போல் நாடகத்தில்தான் பழி, வன்மம், கொலை, கள்ளக்காதல் , சூழ்ச்சி இவை இருக்கிறது என்றால் அதை காட்டிலும் கொடுமை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளது. பெண் தூங்கும் அறையில் ஓவியாவை கண்டபடி பேசிவிட்டு அவர் ஏதாவது கூறுவதை மட்டும் ஆண் போட்டியாளர்களிடம் கூறுகிறார் காயத்ரி. இவர்களும் ஓவியாவிடம் விசாரிக்காமல் பெண்கள் கூறுவதையே வேதவாக்காக கருதுகின்றனர். இது எங்க போய் முடியுமோ என்ற மக்கள் அன்றாடம் கொந்தளித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bigg boss contestants Gayathri and Juliana are giving troubles to Oviya. They doesnt know she is single man army.
Please Wait while comments are loading...