டிவி தொகுப்பாளினி டிடியை போல் காயத்ரி ரகுராமும் சர்ச்சையில் சிக்குவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி டிவி ஷோ ஒன்றில் கமலை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியது போல் காயத்ரி ரகுராமும் சிக்குவாரா என்ற கேள்வி எழுந்தது.

பிரபலம் என்றாலே பிராப்ளம்தான் என்பதை போல் சினிமா நடிகர், நடிகைகள் என்றாலே அவர்கள் சர்ச்சையில் சிக்குவதும் அதற்கு விளக்கம் அளிப்பதும் சகஜம்தான். அதுவும் சமூக வலைதளங்கள் வந்தவுடன் சர்ச்சை கிளம்பிய அடுத்த நொடியே உலகம் முழுவதும் பரவி விடுகின்றன.

தற்போது இந்த சர்ச்சைகள் டிவியையும் விட்டு வைப்பதில்லை. என்னதான் அவர்கள் ஃபெமிலியர் பிகர் என்றாலும், மக்களை ரசிக்க வைப்பவர் என்றாலும் சர்ச்சை என்றால் அது சர்ச்சைதான். சர்ச்சை, சர்ச்சை என்கிறோமே அது எது என்கிறீர்களா?

 டிஆர்பி ரேட்டை அதிகரிக்க...

டிஆர்பி ரேட்டை அதிகரிக்க...

டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காகவும், ஒரு நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காகவும் தொலைக்காட்சி நிறுவனங்கள் படாதபாடுபடுகின்றன. அதற்கேற்றாற்போல் தங்களுக்கு உள்ள செல்வாக்கை வைத்து பிரபலங்களை வைத்து டிவி ஷோக்களை நடத்துவது, பிரபலங்களை டிவி ஷோக்களுக்கு விருந்தினராக வரவைப்பது உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக இறங்கி வருகின்றன.

 டிடியை தெரியாவதர் உளரோ?

டிடியை தெரியாவதர் உளரோ?

விஜய் டிவியின் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி எனப்படும் டிடி தனது பேச்சாற்றால் மிகவும் பிரபலம் அடைந்தார். அதே அளவுக்கு அவர் சர்ச்சையிலும் சிக்கினார். அவருக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்திருந்த நேரம் அது. அப்போது விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டார்.

 முத்தம் கேட்டார் டிடி

முத்தம் கேட்டார் டிடி

அந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் கலந்து கொண்டு கமலிடம் கேள்விகளை கேட்டனர். அப்போது டிடி தனக்கு ஒரு ஆசை உள்ளது என்றார். பின்னர் கமலிடம் சென்று மே ஐ ஹக் யூ என்றார். உடனே கமலும் டிடியை கட்டி அணைத்தார். பின்னர் முத்தம் கொடுத்தார். இது அந்நிகழ்ச்சியை பார்ப்போரை முகம் சுளிக்க வைத்தது.

 அப்பா போல் என்று விளக்கம்

அப்பா போல் என்று விளக்கம்

அதற்கு நான் சிறு வயது முதலே கமல் சாரை பார்த்து வருகிறேன். மகள் தந்தையிடம் வாங்குவதைப் போலத்தான் நான் கமல் சாரிடம் முத்தம் வாங்கினேன். இதில் காமம் ஏதுவும் இல்லை என்றார். இதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கி திக்குமுக்காடினார். தற்போது மற்றொரு நடிகையும் அதேபோல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் , 15 பிரபலங்கள் வெளியுலகத்துடன் துண்டிக்கப்பட்டு 100 நாள்களுக்கு ஒரு வீட்டில் ரகசியமாக கண்காணிக்கப்படுவர். அந்த நிகழ்ச்சி நேற்று ஆரம்பிக்கப்பட்டது. அதில் கமல் தொகுத்து வழங்குகிறார்.

 காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

நடிகர் கமல் ஒவ்வொரு செலிபிரட்டீஸாக அழைத்தார். அப்போது காயத்ரி ரகுராமை அழைத்தார். அவரிடம் கமலிடம் தன் தாய் , தந்தை அவருக்கு ஒன்று கொடுக்க சொன்னதாக கூறி முத்தம் கொடுத்தார். தற்போது இதுவும் பிரச்சனையாகுமா? என்பது தான் கேள்வி. காயத்ரியின் தந்தை ரகுராமும் கமலும் நண்பர்கள் என்று சொல்வதை காட்டிலும் குடும்ப நண்பர்கள் என்று சொல்வது பொருந்தும். எனவே அவர் குடும்ப நண்பர் என்பதால் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று சர்ச்சை கிளம்பாது என்று தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Will Gayathri raguram trap in controversy by kissing Kamalhassan in bigg boss show like DD?
Please Wait while comments are loading...