For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனதில் மாசற்றவர்கள் நாங்கள்… வாய்ப்பு தாருங்கள்: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை தூத்துக்குடிமாவட்டம் குளத்தூரில் இருந்து வைகோ தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முன்னதாக அங்கு அவர் பேசினார் அப்போது அவர் கூறியதாவது

578 தமிழக மீனவர்களின் படுகொலைக்கு மத்தியஅரசு தான் காரணம். இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், சாத்தான் கையால் பதவி ஏற்றுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர்ந்து 17 ஆண்டுகளாக போராடி வருகிறேன். தற்போதைய ஆட்சியாளர்களும் , கடந்த ஆட்சியாளர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

ஸ்டெர்லைட் நச்சு

ஸ்டெர்லைட் நச்சு

கடைசியாக விஷவாயு வெளியேறியதால் மக்கள் போராட்டம் வெடித்தது. அதனால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்தது. ஸ்டெர்லைட் ஆலையின் நச்சு புகையால் தூத்துக்குடி மட்டுமல்ல. குளத்தூர்வரை மக்கள் பாதிப்பு அடைகிறார்கள்.

மத்திய அரசு வஞ்சகம்

மத்திய அரசு வஞ்சகம்

முல்லை பெரியாறு பிரச்சினை, காவிரி பிரச்சினை, ஆந்திரா பாலாறு பிரச்சினை எதுவானாலும் சரி. அதில் தமிழகம் தான் வஞ்சிக்கப்படுகிறது. இதற்கு மத்தியஅரசு தான் காரணம்.

அன்னிய நிறுவனங்கள்

அன்னிய நிறுவனங்கள்

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அடுத்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வால்மார்ட் போன்ற பெரிய அன்னிய நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பதிக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

மக்கள் நலன் முக்கியம்

மக்கள் நலன் முக்கியம்

எங்களிடம் காசு இல்லை. ஆனால் மனதில் மாசற்றவர்கள் நாங்கள். கட்சி பாகுபாடின்றி பொதுமக்களின் நலனுக்காக உழைக்க கூடிய இயக்கம் ம.தி.மு.க. என்றார் வைகோ.

விடிய விடிய

விடிய விடிய

குளத்தூரை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தூரை தொடர்ந்து வேலாயுத புரம், மேல்மாந்தை, பெரியசாமிபுரம், வேம்பார், சூரங்குடி, ஊசிமேசியாபுரமம், அரியநாயகிபுரம், விளாத்திகுளம், சித்தவநாயக்கன்பட்டி, சிங்கிலிபட்டி, வேடு லிப்பட்டி, கழுகாசலபுரம், படர்ந்தபுளி வரை விடிய விடிய பிரச்சாரம் செய்தார் வைகோ

தொடர்ந்து 2 தினங்கள்

தொடர்ந்து 2 தினங்கள்

செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு புதூர் ஒன்றியம் கருப்பூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து தோள்மாலைப்பட்டி, வடக்கு முத்துலாபுரம், ஆகிய ஊர்களின் வழியாக பிரசாரம் செய்து வெம்பூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.

புதன்கிழமை மாலை 3 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் அன்னை தெரசாநகரில் பிரசாரத்தை தொடங்குகிறார். படர்ந்தபுளி, ஆலம்பட்டி, சாலைப்புதூர், மணியாச்சி, இந்திராநகர், சீனிவாசநகரில் பிரசாரத்தை முடிக்கிறார்.

English summary
MDMK leader Vaiko has urged the people to vote for his party in coming LS election and asked them to give them a chance to work for the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X