தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்குவது ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் செயல் - முத்தரசன் தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்குவது ஜனநாயகத்தக்கு வேட்டு வைக்கும் செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். டிடிவி.தினகரன் இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் முத்தரசன் இதனை தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து தனது தரப்புக்கு இரட்டை இலைச்சின்னத்தை பெற்று தர வேண்டும் எனக்கூறி டிடிவி தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்பவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்.

டிடிவி தினகரனின் இந்த செயலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கவலை அளிக்கிறது - முத்தரசன்

கவலை அளிக்கிறது - முத்தரசன்

தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் தரமுடியும் என்ற செய்தி கவலை அளிக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் செயல்

ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் செயல்

மேலும் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்குவது ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் செயல் என்றும் முத்தரசன் கூறினார். தேர்தல் ஆணையத்தையும் விலைக்கு வாங்கலாம் என தினகரன் நினைத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.

காங்கிரசும் கண்டனம்

காங்கிரசும் கண்டனம்

இதேபோல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணாவும் தினகரனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவே ஒரு ஊழல் கட்சிதான் என காங்கிரஸ் அவர் கூறியுள்ளார்.

வெட்கக்கேடான செயல்

வெட்கக்கேடான செயல்

ஊழல் வழிவந்த தினகரனின் செயல் வெட்கக்கேடான செயல் என்றும் தெரிவித்தார். மேலும் ஊழல் பணம்தான் அதிமுகவின் பலம் என கோபண்ணா குற்றம் சாட்டியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CPI state secretary Mutharasan says that giving bribe to the election commission is keeping bomp for the Democracy. Congress spokes person Goppanna said TTV Dinakaran activity is shameless one.
Please Wait while comments are loading...