For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”வெற்றிகரமான 50 சிக்கலான சிகிச்சைகள்” - சாதிக்கும் 'ஓமந்தூரார் தோட்ட' அரசு பல்நோக்கு மருத்துவமனை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளை விட மிகத்தரமான நவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் தனியார் மருத்துவமனைகளை நாடுவோரும் இங்கே குவிந்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 21ந் தேதி முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த அரசு பல்நோக்கு மருத்துவமனையைத் திறந்து வைத்தார். இங்கு உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவது மட்டுமின்றி புற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

GN multi specialty hospital did well treatments…

சுகாதாரமான வார்டுகள்:

சுத்தமான, சுகாதாரமான முறையில் வார்டுகள், மருத்துவமனை வளாகங்கள் பராமரிக்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு உணவு மிகவும் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகின்றன.

சிக்கலான சிகிச்சைகள்:

மருத்துவமனை திறந்து 2 மாதம் கடந்து உள்ள நிலையில் 50 க்கும் மேலான சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இருதயம், புற்றுநோய், ரத்தநாளம், கை சீரமைப்பு உள்ளிட்ட பல அறுவை சிகிச்சைகளை டாக்டர்கள் செய்துள்ளனர்.

ஆய்வக சோதனைகள்:

300 எம்.ஆர்.ஐ. ஸ்கேன், 500 சி.டி. ஸ்கேன் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேலான ஆய்வக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பல்நோக்கு மருத்துவமனையின் சிறப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ் தெரிவித்தார்.

பயன் அடைந்தோர் அதிகம்:

மேலும் அவர் கூறுகையில், இந்த மருத்துவமனையில் தற்போது 175 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 750 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 13 ஆயிரம் புற நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர். 75 இருதய ஆஞ்ஜியோகிராம் சோதனை செய்யப்பட்டுள்ளது.

ரத்த சேமிப்பு கிடங்கு:

அறுவை சிகிச்சை செய்யாமல் மூளை நரம்பியல், ரத்த நாளங்கள் சிகிச்சை தமிழ்நாட்டிலேயே இங்கு தான் செய்யப்படுகிறது. நவீன ரத்த சேமிப்பு கிடங்கு இங்கு உள்ளது. இது எந்நேரமும் நோயாளிகளுக்கு பயன்படுத்த தயாராக வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

English summary
Government multi specialty hospital completed more than 50 severe treatments successfully.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X