For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க அரசாணை வெளியீடு - 3 மாதத்தில் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை ஆணையம் விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அரசு உத்தரவிட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ., மரணம்: 3 மாதத்தில் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு-வீடியோ

    சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஜெ.மரணம் பற்றி விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் ஒன்றை அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    GO -Appointment of Commission of Inquiry-Thiru Arumugasamy

    எத்தனை மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது பற்றி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

    ஜெயலலிதா மரணம் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை தமிழ் ஆங்கிலத்தில் தாக்கல் செய்ய உத்தரவு

    2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா என்ன நிலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது பற்றி விசாரிக்க வேண்டும்.

    GO -Appointment of Commission of Inquiry-Thiru Arumugasamy

    டிசம்பர் 5ஆம் தேதிவரை ஜெயலலிதாவிற்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்ட காரணம் என்ன என்பது பற்றியும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    English summary
    GO -Appointment of Commission of Inquiry-Thiru Arumugasamy to probe Jayalalitha's demise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X