For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலித் இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் போலீஸ் தேடும் 'யுவராஜின்' பரபரப்பான வாட்ஸ்அப் பேச்சு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜாதி மாறி காதலித்ததற்காக தலித் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜை படுகொலை செய்தது தொடர்பாக போலீசார் தேடி வரும் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் தலைவரான யுவராஜ் தலைமறைவாக இருந்தபடியே போலீஸுக்கு சவால்விடும் வகையில் பேசிய பேச்சு வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.

கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் 14 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் தப்பி ஓடி தலைமறைவானதால் போலீசார் தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் யுவராஜ் தமது உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ள செய்தி:

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், மாவீரன் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் பேசுகிறேன்.

கடந்த 20 நாட்களாக நடந்து வரும் பிரச்சனை உங்களுக்கு நன்றாக தெரியும். நம்ம ஒட்டு மொத்த சமுதாயம், ஒட்டு மொத்த பேரவை அனைத்தையும் முடக்கி காவல்துறையோட அளவு கடந்த அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்று வந்துக்கொண்டிருக்கிறது.

Gokulraj murder case: prime accused's whatsapp speech

எங்களுக்கு தெரியாம இல்ல..

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தெரியாமல் இல்லை. பார்ப்போம். நம்ம சமுதாயம் எவ்வளவு மோசமாக போய்க்கொண்டிருக்கிறது என்பதை உணர்வதற்காக இந்த பிரச்சனையை விட்டு வைத்துள்ளோம். காவல்துறையின் இந்த தவறான போக்கை கண்டிக்க தெரியாமல் நம்ம சமுதாயம் இல்லை. அதற்கான ஆள் பலமோ, பண பலமோ இல்லாமல் இந்த பிரச்சனையை நம்ம விட்டு வைக்கவில்லை. ஒண்ணுமே இல்ல, சாதாரண வழக்கு இது. எத்தனையோ வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஒரு ஐ.ஜி., ஒரு டி.ஐ.ஜி. 3 மாவட்ட எஸ்.பி., 10 டி.எஸ்.பி. உள்பட ஏராளமான போலீஸ்காரர்கள் ஆகியோருக்கு இந்த வழக்கு மீது என்ன அக்கறை?

போலீஸ் சதி

ஒருத்தனை கூட்டிக்கொண்டு போய் கருமலைக் கூடல் ஸ்டேசன்ல அடித்துக் கொன்று விட்டனர். இதுகுறித்து அந்த போலீசாரை பெயரளவில் மட்டும் சஸ்பெண்டு செய்தனர். இதுபோன்று மேச்சேரி எல்லை பகுதியில் நடந்த சம்பவத்தில் நம்ம சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை தண்ணியில அமுக்கி கொன்று விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில் தெள்ளத்தெளிவாக தெரிந்தும் குற்றவாளிகளை பிடிக்க எந்த அக்கறையும் காட்டவில்லை. தற்போது என்மீது போடப்பட்டுள்ள இந்த கொலை வழக்கு என்னையும், நமது பேரவையையும் வலுவிழக்க செய்ய வேண்டும் என்று போலீசார் முடிவு எடுத்துள்ளனர்.

பெங்களூரில் தலைமறைவு

இந்த கொலை வழக்கு போலீசாருக்கு என்னை அடக்குவதற்கான துருப்பு சீட்டு. சம்பவம் நடந்து 15 நாட்கள் கழித்து இதனை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸ்காரர்கள் என்னை தேடி வருகின்றனர்.

என்னை பிடிக்க எனது செல்போனை டிராக் செய்து வருகின்றனர். இன்னும் சிறிது நிமிஷத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பேன். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் பெங்களூரில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றிக்கொண்டிருப்பேன்.

முன் ஜாமீன் கிடைச்சிடும்

போலீசார் என்ன வழக்கு வேண்டுமானலும் போடட்டும். கவலைப்பட வேண்டாம், நீதிமன்றம் சென்று உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலைநாட்டுவோம்.

நமது சமுதாய மக்கள் தங்கள் பணிகளை கவனியுங்கள், எப்படியும் நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கி விடுவேன்.

பயமெல்லாம் கிடையாது

தவறான அதிகாரிகள் ஒருத்தரும் தப்ப முடியாது. போலீசாரின் அடக்கு முறையை எதிர்த்து போராடுவோம். நமது சமுதாயத்தை ஒன்று திரட்டி இந்த வழக்கை எதிர்ப்போம்.

எந்த சூழ்நிலையிலும் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், எந்த அடக்குமுறையைக் கொண்டும் என்னை பணிய வைக்க முடியாது.

போலீஸ்காரர்கள் யாரும் நேர்மையாக நடந்துக் கொள்ளவில்லை, பார்த்துக்கொள்ளலாம். அவர்கள் என்ன வேண்டுமானால் செய்யட்டும். நம்ம சமுதாய மக்கள் பகுதி வாரியாக ஒற்றுமையுடன் செயல்பட்டு நம்ம இயக்கத்தை வலுத்தப்பட வேண்டும். இன்று நம்ம சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்கின்றனர். அதிகப்பட்சம் இன்னும் 45 நாட்களுக்குள் ஜாமீன் பெற்று விடுவேன்.

வராத ஜாதி மக்கள்..

தாழ்த்தப்பட்ட ஜாதி கட்சியினர் பொய்யான வழக்குகளை வேண்டுமென்றே என் மீது சுமத்த 10-க்கும் மேற்பட்ட ஜாதி கட்சியினர் போராட்டம் நடத்திக்கின்றனர். ஆனால் இதனை நம்ம ஜாதி கட்சியினர் நடப்பது என்ன என்றே தெரியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது போலும்.

என் மீது சுமத்தப்பட்ட பொய்யான வழக்கு பற்றி நம்ம ஜாதி கட்சி தலைவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை, பரவாயில்லை இருக்கட்டும்.

எந்த சூழ்நிலையிலும் அடிமையாகாமல், அரசியலில் நம்ம சமுதாயத்தையும் அடகுவைக்காமல் ஒட்டு மொத்த ஆட்சியையும் நம்ம நிர்ணயிக்கும் சக்தியாக இருப்போம். அதற்கு தேவையான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருங்கள்.

போலீஸுக்கு தெரிந்தா தெரியட்டும்..

கண்டிப்பாக இந்த பதிவை வாட்ஸ்அப்பில் அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்து விடுங்கள். கண்டிப்பாக போலீசுக்கும் தெரிய வாய்ப்புள்ளது. அதுபற்றி கவலையில்லை. இதனால் நான் போலீசுக்கு சவால் விடுவதாக நினைக்க வேண்டாம். கண்டிப்பாக நான் வெளியே வருவேன். அதுவரைக்கும் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று அவ்வப்போது நான் கூறுவேன். தொடர்ந்து நமது சமுதாயத்திற்கு சிறப்பான பணிகளை செய்து வாருங்கள் நன்றி வணக்கம்.

இவ்வாறு யுவராஜ் கூறியுள்ளார்.

English summary
Theeran Chinnamalai Peravai leader Yuvaraj who was main accused in the murder of Dalit youth V. Gokulraj of Omalur, send a message to his relatives via whatsapp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X