For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் பரபர.. 150 சவரன் நகை அபேஸ்.. தொப்பிக்காரருக்கு வலை!

திருமண விழாவில் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    150 சவரன் நகை அபேஸ்.. தொப்பிக்காரருக்கு வலை!-வீடியோ

    திருவண்ணாமலை: ஆரணியில் அமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் அதிமுக மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் வேலு இல்ல திருமணம் இன்று காலை நடைபெற்றது.

    Gold jewellery robbery at Arani

    முன்னதாக நேற்றிரவு மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மணமகன் உறவினர்கள், தங்களுக்கு திருமண மண்டபத்தில் ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு திரும்பினர். அப்போது அறை திறக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்திருந்த 150 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்ததால் திருமண மண்டபம் பரபரப்பானது. இதுகுறித்து ஆரணி தாலுகா காவல்நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அந்த காட்சியில் தொப்பி அணிந்த நபர் ஒருவர் களவுபோன அறைக்குள் வந்து சென்றது பதிவாகியுள்ளது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    In the Arani, at a wedding ceremony, 150 gold jewellery has been looted. When the reception was over, the groom's relatives went to their room and found that the goods were scattered and 150 pounds of gold jewellery had been stolen. Following this, the Ariane Taluk police filed a police complaint to the police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X