For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுந்தர் பிச்சை படித்தது எந்த பள்ளி?: விக்கிப்பீடியாவில் கொத்துக்கறி போட்ட "ஆர்வக்கோளாறு" ஆசாமிகள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக சுந்தர் பிச்சை அறிவிக்கப்பட்ட பிறகு அவர் எந்த பள்ளியில் படித்தார் என்ற விவரத்தை பலர் போட்டி போட்டுக் கொண்டு விக்கிப்பீடியாவில் மாற்றியுள்ளனர்.

கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூகுள் தலைவராக அறிவிக்கப்பட்டதில் இருந்து பலரும் அவரை பற்றி தான் கூகுள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் விக்கிப்பீடியாவில் சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது. சுந்தர் எந்த பள்ளியில் படித்தார் என்ற விவரம் பல முறை பலரால் மாற்றப்பட்டுள்ளது.

பள்ளிப்படிப்பு

பள்ளிப்படிப்பு

கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி விக்கிப்பீடியாவில் சுந்தர் பிச்சை சென்னை அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயா மற்றும் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் படித்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

75 தடவை

75 தடவை

சுந்தர் பிச்சை தாங்கள் படித்த பள்ளியில் தான் படித்தார் என்று கூறி பெருமையடைய நினைத்தவர்கள் விக்கிப்பீடியாவில் அவர் படித்த பள்ளி விவரத்தை கடந்த 10ம் தேதி அன்று மட்டும் 75 தடவை மாற்றியுள்ளனர்.

பள்ளிகள்

பள்ளிகள்

சுந்தர் பிச்சை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்தார் என யாரோ விக்கிப்பீடியாவில் மாற்றியுள்ளார். அவர் ஜிஆர்டி மஹாலக்ஷ்மி வித்யாலயா, வனவாணி மெட்ரிகுலேஷன், ஆல் ஏஞ்சல்ஸ் பள்ளி ஆகியவற்றில் படித்ததாகவும் விக்கிப்பீடியாவில் மாற்றம் செய்யப்பட்டது.

பிஎஸ்பிபி

பிஎஸ்பிபி

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவனில் படித்தார் என்று விக்கிப்பீடியாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே பக்கத்தின் வலப்புறத்தில் அவர் வனவாணி மற்றும் ஜவஹர் வித்யாலயாவில் படித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

English summary
Google CEO Sundar Pichai's Wikipedia page was changed a lot of times as many people edited the name of the schools he studied.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X