For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் அதிகாரத்தை குறைக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது - நாரயணசாமி

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் அதிகாரத்தை குறைக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மூன்று மாதங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சகம் எனக்கு கடிதம் அனுப்பி இருந்த போது, முதல்வரின் நிதி அதிகாரத்தை குறைக்க உள்ளதாக தெரிவித்து இருந்தது.

 governor has no power to reduce the power of the chief minister, narayanasamy

நானும், தலைமை செயலாளரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினால் அது கிடப்பில் போடப்பட்டது.உள்துறை அமைச்சகம் எங்களது கருத்தை ஏற்று கொண்டு கவர்னரின் உத்தரவை செல்லாது என்றது. தொடர்ந்து எங்களது நிதி நிர்வாக நடைமுறையில் உள்ளது.

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவது கிரண்பேடியின் வேலையாக உள்ளது. கிரண்பேடி தவறான முடிவுகளை எடுத்து அறிவித்து வருகிறார். காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்.கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ள புகாருக்கு, அதன் முடிவு குறித்து பொருத்து கொண்டு இருக்கிறேன்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் அறிவிக்கபட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாரிக்கு வாழ்த்துக்கள். வரவேற்கத்தக்க ஒன்று மகிழ்ச்சி அளிக்கிறது. 40 சதவீதம் வாக்குகள் எங்களிடம் உள்ளது என்றார்.

English summary
Lieutenant Governor Kiran Bedi has no power to reduce the power of the chief minister in Puducherry, says narayanasamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X