சென்னையில் வீடு மற்றும் கடைகளுக்குள் பாய்ந்த அரசு பேருந்து.. பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கரையான்சாவடியில் சாலையோரம் இருந்த வீடு மற்றும் கடைகளுக்குள் அரசுப் பேருந்து புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூவிருந்தவல்லி அருகே கரையான்சாவடி பகுதியில் அரசு பஸ், 2 கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்து விபத்து ஏற்பட்டது. தி.நகரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்ற தடம் எண் 544 கொண்ட பஸ் விபத்திற்குள்ளானது.

 A govt bus went into a house and two shops in Chennai

விபத்தில் படுகாயம் அடைந்த ஐயப்பன் என்பவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் மற்றும் கன்டெக்டரிடம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

One Killed at Chennai Kishkinta Theme Park

வீடுகள் மற்றும் கடைகளுக்குள் அரசுப் பேருந்து புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சென்னை அண்ணாசாலையில் அரசுப் பேருந்து பெயர் பலகை மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A govt bus went in to a house and two shops in Chennai. In this accident one person injured and admitted in the hospital.
Please Wait while comments are loading...