கிண்டி சிறுவர் பூங்கா திடீர் மூடல்- பொதுமக்கள் குழப்பம்... மோடிக்காகவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிண்டி சிறுவர் பூங்காவுக்கு வழக்கத்திற்கு மாறாக வியாழக்கிழமையான நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டி சிறுவர் பூங்காவில் ஏராளமான பறவைகள், மற்றும் பல்வேறு வகையான மான் உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் அதிகளவில் உள்ளன.

Guindy Childrens park will be closed tomorrow

இந்த பூங்காவுக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம். கிண்டி சிறுவர் பூங்காவுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிப்பது வழக்கம்.

இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக வியாழக்கிழமையான நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக விடுமுறை என அறிவிப்பு காகிதம் ஒட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நாளை அடையாறு ஐஐடி மற்றும் அடையாறு புற்றுநோய் மையத்திற்கு வருகை தருகிறார். இதற்காக சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனை கருத்தில்கொண்டே நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Guindy Childrens park management announced that will be closed tomorrow. Usually park will be closed on Tuesdays.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற