For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரங்கு கையில் பூமாலையாக கோவில்கள் இந்து அறநிலையத்திடம் உள்ளன- எச். ராஜா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்டது தீ விபத்தா அல்லது சதியா என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    குரங்கு கையில் பூமாலை..யாரை சொன்னார் ஹெச்.ராஜா?- வீடியோ

    மதுரை: குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் அறநிலைத் துறையிடம் இந்து கோயில்கள் உள்ளது என எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை தீ பிடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 7000 சதுர அடி பரப்பளவுள்ள வீரவசந்தராயர் மண்டபம் பாதிக்கப்பட்டது.

    H Raja blames Tamil Nadu govt

    இந்த தீ விபத்தை அபசகுணம் என்று ஜோதிடர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தீ விபத்துக்குக் காரணம் இந்து சமய அறநிலையத்துறையே என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

    தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு செய்த பின் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் அறநிலைத் துறையிடம் இந்து கோயில்கள் உள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.

    தீ விபத்து சதியா என்றும் கேள்வி எழுப்பிய எச். ராஜா,மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் முதலில் தீ பற்றியபோது, அங்கு 4 பேர் நின்றதாகவும், அவர்கள் தீயை அணைக்க முயலவில்லை, வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர் என்றும் இந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.

    மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து நடந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் யாரிடம் உள்ளது பாதுகாப்பாக உள்ளதா என்று கேட்ட எச். ராஜா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

    English summary
    BJP's H Raja has blamed the Govt of Tamil Nadu for its pathetic maintenance of Hindu temples in the state.He want to cbi inquiry friday midnight fire mishap at the renowned Meenakshi Amman temple in Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X