For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி வலியுறுத்தல

எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தின் சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணம் செயல்படும் எச்.ராஜா போன்றோரை தேசியப் பாதுக்காப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டுமென சட்டசபை உறுப்பினர்களான தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் தங்களது கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா முகநூலில் பெரியார் குறித்து வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

 H Raja need to detain under National Protection Act

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களான தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் எச்.ராஜாவைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்,பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா அவர்கள் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வருவதை தமிழ்நாட்டு மக்கள் சிறிதும் விரும்பவில்லை. தமிழின பற்றாளர்களையும், திராவிட சிந்தனையாளர்களையும், சிறுபான்மையின மக்களையும் இழிவு படுத்தி வருகிறார்.

இப்போது திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதை வரவேற்று,அதேபோல் தமிழகத்தில் பெரியார் சிலையையும் தகர்ப்போம் என கருத்து கூறியிருப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

லெனின் ஏழைகளின் குரலாக உலகமெங்கும் ஒலிப்பவர். தந்தை பெரியார் அவர்கள் சமூக நீதியின் குரலாக ஒலிப்பவர். இதை எச்.ராஜா போன்றவர்கள் உணர வேண்டும். கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தனக்கு தெரியாமல் தனது "அட்மின் " அக்கருத்தை பதிவிட்டிருப்பதாக சொல்வது நம்பும்படியாக இல்லை.

மேலும் இவ்விஷயத்தில் சம்மந்தமே இல்லாமல் பசும்பொன் தேவரை முன்னிருத்தி அவர் தப்பிக்க முயல்வதையும் வன்மையாக கண்டிக்கிறோம். அவர் ஆன்மீக வாதியாகவும், மத நல்லிணக்க வாதியாகவும் திகழ்ந்தவர். வன்முறைகளுக்கு எதிரானவர் ஜனநாயக வாதி என்பதை எச்.ராஜா புரிந்து கொள்ள வேண்டும் .

எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
H Raja need to detain under National Protection Act says MLAs Thameemun Ansari, Thaniyarasu and Karunas. Earlier Protest over Tamilnadu for BJP National Secretary's H Raja comment regarding Periyar Statue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X