கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான நடவடிக்கை நியாயமானதே... சொல்வது எச். ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீக்குளிப்பு சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கார்ட்டூன் வரைந்த பாலா மீது நடவடிக்கை எடுத்தது சரியானது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நியாயப்படுத்தியுள்ளார்.

நெல்லை மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்து வட்டியால் அவதிப்பட்ட இவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறை, நெல்லை ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

 H.Raja tweet against Cartoonist Bala

இதனால் விரக்தி அடைந்த இசக்கி முத்து, தன் மனைவி, இரு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதை தொலைகாட்சியில் பார்த்தவர்களில் கல்நெஞ்சம் கூட கரையும் அளவுக்கு இருந்தது.

இசக்கி முத்துவின் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஒரு குடும்பமே கருகியதை குறிக்கும் வகையில் கார்ட்டூனிஸ்ட் பாலா கார்ட்டூன் வரைந்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரின் புகாரின் பேரில் பாலா கைது செய்யப்பட்டார்.

இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். ஊரே கண்டனம் தெரிவிக்கும் பாலா கைது நடவடிக்கை சரியே என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நியாயப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் கேலிச்சித்திரம் என்கிற பெயரில் விரசமாக கார்ட்டூன் வரைவது கண்டிக்கத்தக்கது. விரசபடம் வரைந்த பாலா விற்கு எதிரான நடவடிக்கை நியாயமானதே என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP National Secretary H.Raja justifies the action which was taken against Cartoonist Bala who did cartoon against Central and State government.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற