ஹேர்ன்னா அவ்வளோ பெரிய கெட்ட வார்த்தையா... கமலிடம் குட்டுப்பட்டும் திருந்தாத காயத்ரி

ஹேர்ன்னா அவ்வளோ பெரிய கெட்ட வார்த்தையா, அதுக்கு போய் கமல் சார் கண்டிக்கிறாரே என்று காயத்ரி புலம்பி வருகிறார். காயத்ரி இன்னும் திருந்தவில்லையே என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரொம்ப பெரிய கெட்ட வார்த்தை பேசிட்டா மாதிரி கமல் தன்னை கண்டிப்பதாக ரைசாவிடம் காயத்ரி புலம்பி வருவது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.

விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட வில்லி ரேஞ்சுக்கு செயல்படுபவர் காயத்ரி ரகுராம். இவர் ஆரம்பத்திலிருந்தே அந்த வீட்டில் உள்ளவர்களை வறுத்தெடுத்து வருகிறார். வாயை திறந்தாலே, ஹேர், கன்ராவி, மொகரகட்டை என்று கெட்ட வார்த்தைகள்தான் சரளமாக வரும்.

இதற்கெல்லாம் அர்த்தம் தெரியும் காயத்ரிக்கு உரையாடல் என்றால் என்னவென்று தெரியாது. அப்போ தமிழில் உள்ள நல்ல வார்த்தைகள் ஏதும் தெரியாது போல, அவர் ரேஞ்சுக்கு தரலோக்கலான வார்த்தைகளை மட்டுமே கற்று வைத்திருக்கிறார் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

சேரி பிஹேவியர்

சேரி பிஹேவியர்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மூடுவிழா நடத்தும் அளவுக்கு சேரி பிஹேவியர் என்று காயத்ரி பேசிய ஒரு வார்த்தை பூதாகரமாக வெடித்தது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

ஓவியாவை பாடாய்படுத்திய...

ஓவியாவை பாடாய்படுத்திய...

நடிகை ஓவியாவுக்கு உள்ள மக்கள் செல்வாக்கை தெரிந்து கொண்ட காயத்ரி, அவரது பெயரை கெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவரை கண்டபடி பேசுவதும், திட்டுவதும் என செய்திருந்தார்.

கமல் கண்டிப்பு

கமல் கண்டிப்பு

காயத்ரியின் கெட்ட வார்த்தைகள் குறித்து மக்கள் டுவிட்டர் வாயிலாக கமலுக்கு கருத்துகளை அனுப்பிய வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் ஓவியா வெளியேற்றம் குறித்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் கமல் தனித்தனியாக விசாரித்தார். அப்போது காயத்ரியின் ஹேர் கமென்ட்டுக்கு கண்டித்தார்.

என்ன தப்பு

என்ன தப்பு

ஹேர்ன்னா அவ்ளோ பெரிய கெட்ட வார்த்தையா என்று நேற்றைய எபிசோடில் ரைசாவிடம் காயத்ரி வாதிட்டார். மேலும் என்னை கமல் சார் இப்படி பேசிவிட்டார் என்று குறை கூறினார். கமலிடம் குட்டுப்பட்டும் கூட காயத்ரி திருந்ததாது மக்கள் மத்தியில் மேலும் எரிச்சலை கிளப்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+