For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் எத்தனை? கைதானோர் எவ்வளவு பேர்?- ஐகோர்ட் சரமாரி கேள்வி

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் எத்தனை நடைபெற்றன? கைதானோர் எவ்வளவு பேர்? போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றனவா? என்பது குறித்து தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக உடுமலைப்பேட்டை மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

மாணவர் போராட்டங்கள்

மாணவர் போராட்டங்கள்

நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள் எத்தனை போராட்டங்கள் நடத்தின? மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் எத்தனை?

மாணவர்கள் மீதான வழக்குகள்

மாணவர்கள் மீதான வழக்குகள்

எத்தனை மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன? வழக்குப் பதிவு செய்யப்படுவதால் ஏற்படும் பின்விளைவுகள் மாணவர்களுக்கு தெரியுமா?

தூண்டப்பட்டனவா?

தூண்டப்பட்டனவா?

அனைத்து நீட் எதிர்ப்புப் போராட்டங்களும் அமைதியாக நடத்தப்பட்டனவா? அரசியல் கட்சிகள் இல்லாமல் தனியார் அமைப்புகள் போராட்டத்தைத் தூண்டிவிட்டனவா?

நாளை பதிளிக்க உத்தரவு

நாளை பதிளிக்க உத்தரவு

நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் மாணவர்களுக்கு ஏன் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தவில்லை? இந்த கேள்விகளுக்கு நாளை பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

English summary
The Madras High Court asked the state government what steps it has taken to check the anti-NEET protests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X