For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளியங்கிரி மலையில் விதி மீறி கட்டடம்.. ஈஷா மையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்

கோவை வெள்ளியங்கிரி மலையில் விதி மீறி கட்டடம் கட்டப்பட்டது தொடர்பாக ஈஷா யோகா மையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கோவை வெள்ளியங்கிரி மலையில் கட்டடங்களை கட்டியது தொடர்பான வழக்கில் பதில் அளிக்க ஐகோர்ட் ஈஷா யோக மையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பி.முத்தம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

HC issued notice to Isha yoga center

அந்த மனுவில், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உள்ள இக்கரை பொழுவம்பட்டி கிராமம் மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இக்கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி உயர சிவன் சிலையும், அதைச் சுற்றி சுமார் ஒரு லட்சம் சதுர அடியில் தியான மண்டபங்கள், கார் பார்க்கிங், பூங்கா போன்ற கட்டுமானங்கள் சட்டத்துக்கு புறம்பாக மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன. மேலும், விதிகளை மீறி மலைப்பகுதியைச் சுற்றிலும் ஆக்கிரமித்து விதிமுறைகளை மீறி கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் விதிகளை மீறி 109 ஏக்கரில் கட்டிடங்களை கட்டியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. ஆதியோகி சிவன் அமைத்தற்கான ஆவணங்களை கேட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதி முறை மீறி கட்டப்பட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பாக பதில் அளிக்க ஈஷா யோகா மையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
Chennai High Court has issued a notice to Isha yoga center about unauthorized building at Velliangiri in Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X