சுட்டெரிக்கும் வெயில்.. சுருண்டு விழுந்து ஒருவர் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் கொடுமை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் இருக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது. அனல் காற்று வீசும் என்பதால் பகலில் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பொதுமக்கள் வெளியே நடமாடவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் பட்டப்பகல் வெயிலுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் சொந்த வேலை விஷயமாக கொளுத்தும் வெயிலில் வெளியே சென்றுள்ளார்.

Heat wave, one death in Thiruvannamalai today

அப்போது, வெப்பத்தை தாங்க முடியாமல் சாலையிலேயே சுருண்டு விழுந்துள்ளார். அக்கம் பக்கம் இருப்பவர்கள் அவரை தூக்கி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சாலையில் சுருண்டு விழுந்து செல்வராஜ் மரணம் அடைந்தது குறித்து வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலகர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Selvaraj in Thiruvannamali has died over heat wave in Tamil Nadu.
Please Wait while comments are loading...