வால்பாறையில் கனமழை... ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: வால்பாறையில் கனமழை பெய்ததால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் வாழும் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம், வால்பாறையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள நடுமலை ஆறு, சிறுவர் பூங்கா ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 Heavy flood in Valparai rivers due to south west monsoon

வெள்ளத்தின் காரணமாக அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாவண்ணம் ஆற்றின் கரையோரம் வாழும் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வால்பாறையில் எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் இப்போது ஆற்றின் கரைப்பகுதிகளில் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்த காரணத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Valparai due to heavy rain, heavy flood in rivers and official advised the people who are living in river bank to go safer places.
Please Wait while comments are loading...