சென்னையில் ஜில் மழை... 3 நாளைக்கு வெளுக்குமாம் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை கொட்டி வருகிறது. காலையில் முதல் வெயிலடித்த நிலையில் சட்டென்று வானிலை மாறி குளுமை பரவியுள்ளது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மழையால் குற்றாலம், கன்னியாகுமரி அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Heavy rain in Chennai 3 days says met office

சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே வெயில் கொளுத்தியது. வெப்பத்தின் தாக்கத்தால் புழுக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
திடீரென்று வளசரவாக்கம், கோயம்பேடு அண்ணாநகர், மயிலாப்பூர், மந்தைவெளி, உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது.

வெப்பச்சலனம்

வெப்பச்சலனம் காரணமாக வட மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் சொன்னது போலவே பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sudden Heavy rain at Mylapore, Mandaively and Gemini Flyover area in Chennai.
Please Wait while comments are loading...