மழையோடு விளையாடி... மழையோடு உறவாடி... காகித கப்பல் விடும் குட்டீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மழையில் காகித கப்பல் விடும் குட்டீஸ்-வீடியோ

  சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையில் நனைந்து கொண்டே காகித கப்பல் விட்டு விளையாடி வருகின்றனர் சிறுவர்கள்.

  பலத்த மழை காரணமாக சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மயிலாப்பூரில் சில இடங்களில் மழை நீர் குழந்தைகள் விளையாடும் அளவிற்கு தேங்கியுள்ளது.

  பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் தேங்கியுள்ள வெள்ளநீரில் சிறுவர்கள் காகித கப்பலை விட்டு விளையாடி வருகின்றனர்.

  மழையோடு விளையாடி... மழையோடு உறவாடி... மழையோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டு வருகின்றனர் சிறுவர்கள்.

  கரை சேருமா கப்பல்

  கரை சேருமா கப்பல்

  மழையில் நனைந்து கொண்டே காகித கப்பல் விடுவது அலாதியான சுகம். சென்னைவாசிகளுக்கு அந்த சுகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதே மழை வந்து விட்டதால் கப்பல் விளையாட்டு ஆரம்பமாகி விட்டது.

  மழையோடு விளையாட்டு

  மழையோடு விளையாட்டு

  மழையில் விளையாடுவது குட்டீஸ்களுக்கு பிடித்தமான விளையாட்டு. இன்றைக்கு டெங்கு, எலிக்காய்ச்சல், டைபாய்டு என்று அச்சுறுத்துவதால் பலரும் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை. ஆனாலும் பெற்றோர்களை ஏமாற்றிவிட்டு குழந்தைகள் விளையாடுகின்றனர்.

  ஜாலி ஜாலி லீவு

  ஜாலி ஜாலி லீவு

  மழை வந்தாலே விடுமுறை கிடைப்பதால் குழந்தைகளுக்கு மழை என்றாலே கொண்டாட்டம்தான். மழை காலத்தில் செய்தி சேனல்களின் டிஆர்பி அதிகரிப்பதே குழந்தைகளினால்தான்.

  பத்திரம் குழந்தைகளே

  பத்திரம் குழந்தைகளே

  மழையில் விளையாடுவது சந்தோசமான விசயம்தான் ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் வைரஸ் காய்ச்சலுக்கும் அஞ்சத்தான் வேண்டியிருக்கிறது. ஆனாலும் எந்த பயமும் இன்றி விளையாடுவதுதானே குழந்தை பருவம். உங்களுக்கும் மழைக்கால விளையாட்டு இருக்கிறதா எங்களுக்கு எழுதுங்க மக்களே.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Monsoon memories back from childhood days,Chennai chideren playing paper boat in rainy day.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற