சென்னை, கடலூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடிப்பதால் சென்னை, கடலூர் உள்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தலைநகரான சென்னை மழை வெள்ளத்தால் தத்தளிக்கிறது.

Heavy Rain to lash 18 TN districts

வடதமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை, கடலூர், நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, குமரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை திருவாரூர் உள்பட மொத்தம் 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தமான் அருகே மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இன்று அல்லது நாளை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் தமிழகம் நோக்கி வந்தால் அடுத்து ஒரு வாரம் மழை பெய்யும். இல்லை என்றால் புதன்கிழமை இரவு முதல் மழை குறைய வாய்ப்பு இருக்கிறது.

இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பகல் நேரத்தில் கடல்பகுதியை நோக்கியும், இரவில் நிலப்பகுதியை நோக்கியும் நகர்கிறது. அதனால் இரவு நேரங்களில் தான் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heavy rain to lash 18 districts in Tamil Nadu including Chennai and Cuddalore on monday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற