மேற்கு தொடர்ச்சி மலையில் செம மழை.. ஆர்ப்பரிக்கும் குற்றால அருவி.. குளிப்பதற்குத் தடை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அதிக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் நேற்று திடீர் மழை பெய்தது. இதனால் குறைந்தபட்ச அளவு தண்ணீர் கொட்டிய குற்றாலம் மெயினருவியில் நேற்று இரவு ஆர்ப்பரித்து கொட்டியது.

Heavy water in Courtallam falls: Police ban for take bath

இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு பனியில் இருந்த போலீஸார் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க தடைவிதித்துள்ளனர். சில நிமிடங்களில் அருவியில் காட்டாற்று வெள்ளம் உருவானது.

தொடர்ந்து பாதுகாப்பு வளையத்தை தாண்டி ஆக்ரோசமாக தண்ணீர் கொட்டுவதால் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heavy rain in Western Ghats results heavy water in Courtallam falls. Police put ban for taking bath for tourists.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற