சசிகலா குடும்பத்தில் ஐடி ரெய்டில் சிக்கிய இடங்கள் இவைதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

  சென்னை: சசிகலா குடும்பத்தினர் போலி நிறுவனங்கள், போலி வங்கி கணக்குகள் மூலம் வரி ஏய்ப்பு செலுத்தியது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நாள் முழுவதும் சோதனை நடத்தினர். இச்சோதனை நாளையும் நீடிக்க உள்ளது.

  நாடு முழுவதும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, டெல்லி என 190 இடங்களில் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்கள், இடங்கள் வருமான வரி சோதனையில் சிக்கியுள்ளன.

  Here is where IT raids are taking place in Sasikala family

  வருமான வரி சோதனையில் சிக்கிய முக்கிய இடங்கள்:

  •  சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளேடு அலுவலகம்.
  •  சென்னையில் இளவரசி மகன் விவேக்கின் வீடு
  •  சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீடு
  •  சென்னையில் விவேக்குச் சொந்தமான ஜாஸ்சினிமா அலுவலகம்
  •  சென்னை கே.கே.நகரில் தினகரனின் உதவியாளர் ஜனா வீடு
  •  தஞ்சையில் டாக்டர் வெங்கடேஷ், சசிகலா கணவர் நடராஜன் வீடுகள்
  •  மன்னார்குடி மன்னை நகரில் தினகரன் வீடு
  •  மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் சசிகலா தம்பி திவாகரன் வீடு
  •  சுந்தரக் கோட்டையில் திவாகரனின் கல்லூரி
  •  திருச்சியில் டாக்டர் சிவக்குமார், கலியபெருமாள் வீடுகள்
  •  நாமக்கல்லில் சசிகலாவின் வக்கீல் செந்தில் வீடு
  •  ஈரோட்டில் தொழிற்சாலை
  •  கொடநாட்டில் சசிகலாவுக்கு சொந்தமான கர்சன் எஸ்டேட்
  •  புதுக்கோட்டையில் சசிகலா அண்ணன் சுந்தரவதனம் வீடு
  •  பெங்களூருவில் கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி வீடு
  •  புதுச்சேரியில் தினகரனின் பண்ணை வீடு
  •  டெல்லி, ஆந்திராவில் சசிகலா தொடர்பான நிறுவனங்கள்
  •  ஜெ.வின் தனிச்செயலராக இருந்த பூங்குன்றன் வீடு
  • கோவையில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமிக்கு சொந்தமான 7 இடங்கள்
  • வேதாரண்யம் அருகே விவேகம் திரைப்பட விநியோகஸ்தர் வெங்கடாசலம் வீடு
  • படப்பை மிடாஸ்ஸ் தொழிற்சாலை
  • கோவை காற்றாலை
  • அதிமுக வழக்கறிஞர் வேலு கார்த்திகேயன் வீடு
  • திருவாரூர் அம்மா பேரவை மாநில இணைச் செயலர் ராஜேஸ்வரன் வீடு

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The raids began at the Jaya TV office when a team of 10 officials from the IT department began the process under ‘Operation Clean Money. Here are the prominent places where the IT department conducted the raid:

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற