கால்நடை விற்பனை கட்டுப்பாட்டுக்கு எதிரான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: கால்நடை விற்பனை கட்டுப்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற கிளை வேறு அமர்வுக்கு மாற்றியுள்ளது. மத்திய அரசின் வழக்கறிஞர் ஸ்வாமிநாதன் தற்போது நீதிபதியாக இருப்பதால் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கால்நடை விற்பனை கட்டுப்பாட்டிற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

High Court bench Changed the cattle sale banned case to different session

இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் ஸ்வாமிநாதன் தற்போது நீதிபதியாக இருப்பதால் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தடையை நீட்டிப்பது குறித்து தற்போது உத்தரவு எதுவும் பிறப்பிக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவித்துள்ளது.

மேலும் இவ்வழக்கின் விசாரணையை ஜூலை 13ம் தேதிக்கு உயர்நீதிமன்றக்கிளை ஒத்திவைத்தது. எந்த அமர்வுக்கு மாற்றப்படுகிறது என்ற தகவல் வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
High Court bench Changed the cattle sale banned case to different session. The case has been transferred to a different session since the federal lawyer Swaminathan is currently a judge.
Please Wait while comments are loading...